full screen background image
Search
Sunday 19 May 2024
  • :
  • :
Latest Update

கேப்டன் மில்லர் திரை விமர்சனம்

கேப்டன் மில்லர் திரை விமர்சனம்

சினிமா அரக்கர்கள் இணைந்து வழங்கி இருக்கும் படம் தான் கேப்டன் மில்லர் இந்தத் திரைப்படம் நிச்சயமாக ஒரு உலக தரமான படம் என்று தான் சொல்ல வேண்டும் தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல கதைக்களத்திலும் ஒரு உலகத்தரமான படம் என்று சொல்லலாம். எத்தனையோ திரைப்படங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வந்திருக்கிறது அதில் நாம் போராட்டங்களை தான் பார்த்திருப்போம். ஆனால் இந்தத் திரைப்படத்தில் போராட்டம் இல்லை ஒரு போரையை நடத்தி இருக்கிறார். யாரும் சொல்லப்படாத ஒரு கதை என்று சொல்லலாம் மன்னிக்கவும் திரைக்கதை என்று சொல்லலாம்.

இந்த படத்தில் தனுஷ் சிவ்ராஜ்குமார் சுதீப் கிஷன் காளிவெங்கட் ப்ரியங்கா மோகன் குமரவேல் நிவேதா சதீஷ் ஜான் கோக்கேன் ஜெயபிரகாஷ் மற்றும் பலர் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரித்து இருக்கும் படம் கேப்டன் மில்லர்

கொந்தளிப்பான 1930 களில், படத்தின் கதை கேப்டன் மில்லரின் வாழ்க்கையை சித்தரிக்கிறது, மில்லரின் எதிர்ப்பால் பிறந்த ஒரு கிராமத்து ஹீரோ, அவர் புரட்சியின் நெருப்பை பற்றவைத்தார். அவரது மீறல் ஒரு பிரிட்டிஷ் அதிகாரியின் முடிவின் தொடக்கத்தையும் ஒரு புராணக்கதையின் பிறப்பையும் குறிக்கிறது. அவருக்கு எதிராக பெரும் முரண்பாடுகள் இருந்தபோதிலும், இப்போது காவல்துறையால் தேடப்படும் கேப்டன் மில்லர், ஒரு பெரிய பிரிட்டிஷ் படையிடமிருந்து தங்கள் வீட்டைக் காப்பாற்றுவதற்காக கிராம மக்களை ஒன்று திரட்டுகிறார். அவரது தைரியமும் உறுதியும் கிராமவாசிகளை அவர்களின் சுதந்திரத்திற்காக போராட தூண்டுகிறது, மேலும் அவர்கள் ஒன்றாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்க்கிறார்கள். ஏமாற்றும் கிராமவாசிகள் பணத்திற்காக ஆங்கிலேயர்களை ரகசியமாக ஆதரித்ததால், கேள்வி எஞ்சியிருந்தது: கேப்டன் மில்லர் அவர்களின் துரோகத்தை வெளிக்கொணர்ந்து வாழ்க்கை ஓட்டத்தில் எப்படி வெற்றி பெறுவார்? இது ஒரு முழுமையான, செயல் நிறைந்த காவியமாகும், இது பார்வையாளர்களை சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் உலகிற்கு கொண்டு செல்கிறது. அதன் ஆடம்பரமான செட்கள், உடைகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுடன், படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு ஒரு காட்சி விருந்தாக இருக்கும் என்பது உறுதி

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் காட்சிக்கு காட்சிக்கு ஒரு நூற்றுக்கும் மேற்பட்ட துணை நடிகர்களுடன் மிகச் சிறப்பாக இந்த கதையை கையாண்டு உள்ளார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு இயக்குனராக பலம் வருவார் ஏன் தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாவிற்கு இவர் சவால் விடுவார் என்றும் சொல்லலாம். இந்தக் கதைக்கு இவர் மட்டும்தான் பொருத்தம் என்று புரிந்து நடிகர் தனுஷை நாயகனாக்கியதற்காகவே இவரை பாராட்ட வேண்டும் தனுஷ் இல்லாமல் இந்த கதாபாத்திரதில் வேறு யாரும் பொருந்த மாட்டார்கள் பொருந்தி இருக்கவும் முடியாது தனுஷ் நடிகனா இல்லை நடிப்பின் அரக்கனா என்று சொல்லும் அளவுக்கு இந்த படத்தில் நடித்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் ஒவ்வொரு காட்சிகளிலும் அவர் நடிப்பில் நம்மை மிரட்டி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அப்பாடா என்று வியந்து பார்க்கும் அளவிற்கான ஒரு நடிப்பு இதுவரை இப்படியான ஒரு நடிப்பை எந்த ஒரு நடிகரும் கொடுக்கவில்லை என்று ஆணித்தரமாக சொல்லலாம். ஒரு கதைக்காக உழைப்பார்கள் ஆனால் இவர் உழைக்கவில்லை அந்தக் கதையின் தன்மையைப் புரிந்து அதற்காக உயிரே கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஒரு காட்டு பகுதிகளில் கரடு முரடான இடங்களில் மிக அற்புதமாக தன்னை வருத்தி இந்த கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் தனுஷ் என்று சொன்னால் மிகை ஆகாது.

படத்தில் நடித்த அனைவரும் மிக சிறப்பான ஒரு நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள் குறிப்பாக காளி வெங்கட், குமரவேல் ஜான் கொக்கின் ஆங்கிலேயர்களாக நடித்த நடிகர்கள் அனைவரும்.

இதுவரை அழகு பதுமையாக வந்த பிரியங்கா மோகன் இந்த படத்தில் மிகசிறந்த கதாபாத்திரத்தில் மிளிர்கிறார் .அதேபோல நிவேதா சதீஷ் அவரும் காட்சிக்கு காட்சி நம்மை தருகிறார் குறிப்பாக சண்டைக்காட்சிகளில் அதிரடியாக நடித்து இருக்கிறார் .

படத்துக்கு மிக பெரிய பலம் என்றால் ஒளிப்பதிவு மட்டும் இசை இந்த இரண்டுமே படத்தின் இரண்டு கண்களாக இருக்கிறது. பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷ் இசை சாம்ராஜ்யமே நடத்தியுள்ளார் பின்னணியில் இசையில் ஒரு உலகத்தரத்தை காண்பித்துள்ளார்.

மொத்தத்தில் கேப்டன் மில்லர் இந்திய சினிமாவின் பெருமை