full screen background image
Search
Sunday 5 May 2024
  • :
  • :
Latest Update

முக்கியச் செய்திகள்!

* சென்னை: தினகரன் ஆதரவாளர்கள் 3 பேரை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து கொருக்குப்பேட்டையில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்.

*ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்வேன் என்று நாளிதழில் வெளியான செய்தி தவறு – நடிகர் கவுண்டமணி. நான் எந்தக் கட்சியையும் சாராதவன்; அரசியலிலும் இல்லாதவன். அவதூறு பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் – நடிகர் கவுண்டமணி.

*நாகை: புயலில் காணாமல் போன நம்பியார் நகர் மீனவர்கள் 11 பேரை கண்டுபிடிக்காததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

*புதுச்சேரி: கன்னியாகுமரியை தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்கக்கோரி கடலூர் சிங்காரவேலன் சிலை அருகே அனைத்து மீனவ பஞ்சாயத்து சார்பாக ஆர்ப்பாட்டம். புயல் பாதிப்பால் உயிரிழந்த மீனவர்களுக்கு கண்ணீர் அஞ்சலியும் செலுத்தினர்.

*காஞ்சிபுரம்: கல்பாக்கம் சதுரங்கப்பட்டினம் கிராமத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த ஸ்டாலினின் சடலம் சின்னக்குப்பம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது.

*தாய்லாந்துக்கு கடத்த முயன்ற சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 210 நட்சத்திர ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்; சென்னையை சேர்ந்த ஜாபர் அலி, முகமது தமீம் அன்சாரி கைது. பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகளை வனத்துறையினரிடம் சுங்கத்துறையினர் ஒப்படைத்தனர்.

*அகமதாபாத் வீதிகளில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்திக்கு அனுமதி மறுப்பு – அகமதாபாத் போலீஸ் அதிரடி. சட்டம் – ஒழுங்கை கருத்தில் கொண்டு இருவரும் பிரசாரம் செய்ய தடை – அகமதாபாத்
போலீஸ்.

*ஜெயலலிதா பிறந்தநாளன்று பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 50% மானியம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.

*போராட்டங்களில் ஈடுபட்ட 9 ஆயிரம் மீனவர்கள் மீது வழக்குப்பதிவு – நடவடிக்கை எடுக்கப்படாது- அமைச்சர் ஜெயக்குமார்.