full screen background image
Search
Saturday 4 May 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 15/11/17 !

* இந்திய கடலோர காவல்படை தாக்குதலைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்.

* உத்தரப்பிரதேசத்தில் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

* மகாராஷ்டிராவில் விவசாயிகள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு 2 விவசாயிகள் படுகாயம்.

* சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட வசதிகள் குறித்து, விசாரணை நடத்திய கமிஷன் 300 பக்க அறிக்கை தாக்கல் செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* தமிழக ஆறுகளில் செயல்படும் மணல் குவாரிகளை மூட உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் வழக்கு.

* தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையினரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் – தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

* ராஜீவ் கொலை வழக்கில் கைதானவர்களை விடுவிப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் நளினியை விடுவிக்க முடியாது – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு.

* முல்லை பெரியாறு அணைப்பகுதியில் கார் பார்க்கிங் கட்டத் தடையில்லை. தேசிய புலிகள் காப்பக ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதால் கேரளா கார் பார்க்கிங் அமைக்கலாம் – பசுமை தீர்ப்பாயம்.

* நில அபகரிப்பு புகார் எழுந்ததை தொடர்ந்து கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகினார் தாமஸ் சாண்டி.

* ஆறுகளை பாதுகாக்காத மகாராஷ்டிர அரசு : ரூ.100 கோடி அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.

* சசி குடும்ப சொத்து பட்டியலை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தது எடப்பாடி பழனிசாமி என்ற தகவலால் பரபரப்பு.

* என் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை. என்னுடைய சொத்துக்கணக்குகளை சமர்ப்பிக்க வருமானவரி அலுவலகம் வந்தேன் – சசிகலா உறவினர் கிருஷ்ணப் பிரியா பேட்டி.

* ஆளுநர் ஆய்வில் உள்நோக்கம் இல்லை, மாநில சுயாட்சிக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம் – அமைச்சர் ஜெயக்குமார்.

* தமிழக ஆளுநர் ஆய்வுக்கு திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம்.

* ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது – டிடிவி.தினகரன்

* மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான மூன்று சொத்துக்கள் 12 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன.

* ஆளுநர் ஆய்வு மேற்கொண்டது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை – அமைச்சர் செங்கோட்டையன்.

* சசிகலா உறவினர்களின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட பணத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்.

* எனக்கு விவசாயிகளின் துயரங்கள் நன்றாக தெரியும், தண்ணீருக்காக அவர்கள் போராடுவது வேதனை அளிக்கிறது – தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

* சென்னை ராயபுரம் மாநகராட்சிப் பள்ளியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

* கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

* அகமும் புறமும் சுத்தமாக இருக்க வேண்டும் என அனைத்து மதங்களும் வலியுறுத்தி வருகின்றன. தூய்மை இந்தியா திட்டத்தை குடிசைப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் : ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

* கோவையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் செல்வேன் – தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

* ஆளுநரின் ஆய்வால் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இருக்கும் உறவு பாதிக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா

* திருப்பூர் தொரவளூரில் 2,500 மரக்கன்றுகள் நடும் விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.

* கன்னியாகுமரியில் ரூ.2000 கோடி மோசடி வழக்கில் நிதிநிறுவன உரிமையாளர் நிர்மலன் மதுரை முதலீட்டாளர்கள் நலச்சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சரண்.

* சரணடைந்த நிர்மலனை நவ.29 வரை காவலில் வைக்க நீதிபதி மீராசுகந்தி உத்தரவு.

* கொடுங்கையூர் விபத்துக்கு மின்வாரியம் பொறுப்பேற்கிறது, பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் அந்த விபத்து ஏற்பட்டிருக்காது – அமைச்சர் தங்கமணி.

* அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போனார்கள் : : கடம்பூர் ராஜூ.

* ஆளுநர் தமிழகத்தை சுற்றிப்பார்க்கலாம், விழாக்களில் பங்கேற்கலாம், ஆனால் அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்வது அதிகார வரம்பை மீறிய செயல் – வைகோ.

* கேரள நடிகை கடத்தல் வழக்கு : நடிகர் திலீப்பிடம் கேரள போலீசார் விசாரணை.

* ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில், அந்நாட்டு ராணுவம் அதிரடியாக அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.

* மாநில உரிமையை திமுகவை காட்டிலும் அதிமுக என்றைக்கும் விட்டுக்கொடுத்தது கிடையாது : அமைச்சர் செல்லூர் ராஜூ.

* முதல்வர் நாற்காலியில் ஆளுநரே அமர்ந்தாலும் கவலையில்லை என்ற நிலையில் அமைச்சர்கள் உள்ளனர் : துரைமுருகன் திமுக.

* நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி உயிரிழந்தார்.

* கொசஸ்தலை ஆற்றின் கழிமுகப் பகுதியில் சாம்பல் கொட்டப்பட்ட விவகாரம்: இடைக்கால அறிக்கை தாக்கல்.

* வருமான வரித்துறை அலுவலகத்தில் டிடிவி.தினகரன் ஆதரவாளர் புகழேந்தி விசாரணைக்கு ஆஜர்.

* ஆளுநர் தலையீட்டை முதல்வர் எதிர்க்க வேண்டும் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

* ஆளுநர் ஆய்வு மாநில சுயாட்சி கோட்பாட்டிற்கு எதிரானது – மார்க்சிஸ்ட் கம்யூ மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன்.

* சென்னை நகரில் கூடுதலாக 40 சிக்னல்கள் அமைக்கப்படும் : போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர்.

* ஆளுநர் ஆய்வு குறித்து சர்ச்சையை எழுப்பி, எதிர்கட்சிகள் ஆதாயம் தேடப்பார்க்கிறார்கள் – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்.

* கர்நாடக வனப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த 40 யானைகள் ஓசூர் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாம் – வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

* புதுச்சேரி பல்கலையில் அத்துமீறி நுழைபவர்களை தேவைப்பட்டால் கைது செய்யலாம் – சென்னை உயர்நீதிமன்றம்.

* அடையாள அட்டை இல்லாமல் வருபவர்களை அனுமதிக்கக்கூடாது. புதுச்சேரி பல்கலைக்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்.

* திருச்சி மாநகரில் போலீசின் ரெட் அலர்ட் அமல்படுத்தப்பட்டுள்ளது.

* காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைபெய்ய வாய்ப்பு : வானிலை மைய இயக்குநர்