full screen background image
Search
Thursday 2 May 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 06/12/17 !

* ஓகி புயலால் கன்னியாகுமரியில் 3,696 ஹெக்டர் பரப்பளவில் பயிர் பாதிப்பு : முதற்கட்ட ஆய்வில் வேளாண்த் துறை செயலர் தகவல்.

* வழக்கறிஞர் தொழில் தர்மத்தைக் காக்க மத்திய அரசு தலையிடும் நேரம் வந்துவிட்டது : உச்சநீதிமன்றம்.

* இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையும் சமூக சீர்திருத்தவாதியுமான அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளான இன்று அன்னாரது நினைவை போற்றுவோம் – டிடிவி.தினகரன்.

* ஓகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களின் நிலைமை தொடர்பாக, முப்படை அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை.

* ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு என அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

* அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை 6 மணிக்குமேல் சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை – புதுச்சேரி அரசு.

* ஆர்கே.நகரில் விஷால் வேட்பு மனு நிராகரிப்பு, தமிழக அரசியலில் மிகச் சிறந்த ஜனநாயக படுகொலை. தேர்தல் ஆணையம் மத்திய – மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தெளிவாகிறது – இயக்குனர் அமீர்.

* தாய்மொழியில் தொடக்கக் கல்வியை பயிற்றுவியுங்கள் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வேண்டுகோள்.

* ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் தலையீடு உள்ளது என்பதற்கு விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு ஒரு சான்று : திருமாவளவன்.

* தேனி : கம்பம் அருகே சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம். சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்ததால் 6 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி.

* அதிமுக தேர்தல் ஆலோசனை கூட்டம், இன்று மாலை ஆர்.கே.நகரில் நடைபெற உள்ளது. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

* கோவையை தொடர்ந்து கன்னியாகுமரியிலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு நடத்துகிறார்.

* திரைப்பட இசையமைப்பாளர் ஆதித்யன் உடல்நலக்குறைவால் ஐதராபாத்தில் காலமானார். அமரன், சூப்பர் குடும்பம், லக்கிமேன், மாமன்மகள் உள்ளிட்ட படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.

* தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக முன்னாள் எம்பி ஜேஎம்.ஆரூணின் மகன் ஹசன் ஆரூண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* நடிகர் விஷால் மிரட்டப்பட்டதாக ஆதாரம் காட்டியதை தொடர்ந்து மனுவை ஏற்றுக்கொண்ட, தேர்தல் அதிகாரி, 4 மணி நேரம் கழித்து நிராகரித்தது ஏன் ? – முன்னாள் சென்னை மேயர் மா.சுப்பிரமணியன்.

* நாகை செருதூர் வெள்ளையாற்றில் படகு கவிழ்ந்து காணாமல் போன மீனவர் உடல் சடலமாக மீட்பு.

* மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு பின் மீண்டும் தொடங்கியது.

* தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்.