full screen background image
Search
Monday 6 May 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்பு செய்திகள் 03/11/17 !

* நடிகர் கமல் மீது மதத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் உத்தரபிரதேசம் மாநிலம் பனாரஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு.

* நீர்நிலைகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை எந்த ஏரியும் முழு கொள்ளளவை எட்டவில்லை – அமைச்சர் ஆர்பி.உதயகுமார் வேண்டுகோள்.

* திருவாரூர் மணலகரத்தில் சம்பா பயிரில் தேங்கிய மழை நீரை அகற்ற சென்ற போது மின்சாரம் பாய்ந்து கலியபெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

* சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

* ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்.

* அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது. மழை நீர் தேங்குவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? – தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.

* மழையால் பாதிப்பு ஏற்படக்கூடிய 4,399 தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் உதயகுமார்.

* ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷனுக்கு எதிரான மனு தள்ளுபடி.

* காவல்துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா ? – திருமாவளவன்.

* இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லையெனில் தொப்பி சின்னத்தில் போட்டியிடத் தயார் – டிடிவி ஆதரவாளர் புகழேந்தி.

* திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வழக்கு : அதிமுக வேட்பாளரை அங்கீகரித்து ஜெயலலிதா கைரேகை பதிவு செய்தது குறித்து டாக்டர் பாலாஜி 2-வது நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாட்சியம்.

* சர்க்கரை விலை உயர்வை ரத்து செய்யக்கோரி, நவ.6-ல் நியாயவிலைக் கடைகள் முன்பு நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – திமுக அறிவிப்பு.

* சென்னை தாம்பரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 292 பேர் வெளியேற்றப்பட்டு பெருங்களத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

* சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முடிச்சூர் பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தனர்.

* மெரீனா பீச்சில் படப்பிடிப்பு நடத்த நிரந்தரத் தடை – தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சகம்.

* நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு : சிபிஐ விசாரணை கேட்கிறார் நடிகர் திலீப்.

* கமல்ஹாசன் இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதை பாஜக கண்டிக்கிறது : இல. கணேசன்.

* பெருங்களத்தூரில் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார் தமிழக முதல்வர் பழனிசாமி.

* 599 அதிதீவிர பாதிப்பு பகுதிகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த முதலமைச்சர் உத்தரவு – அமைச்சர் உதயகுமார்.

* காஞ்சிபுரம் நாராயணபுரம் ஏரி, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் பொன்னையா உத்தரவு.

* திருவள்ளூரில் பெய்து வரும் தொடர் மழையால் 73 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது – ஆட்சியர் சுந்தரவல்லி.

* புதுச்சேரி மாநில புதிய தலைமை செயலாளராக அஸ்வின் குமார் நியமனம் – மத்திய உள்துறை அமைச்சகம். புதுச்சேரி தலைமை செயலாளராக பணியாற்றி வந்த மனோஜ்குமார் பரிதா டெல்லிக்கு மாற்றம்.

* ஷார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியில் பங்கேற்க திமுக செயல் தலைவர் ஸ்டாலின் துபாய் பயணம்.

* சென்னை மெரினா கடற்கரையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி முதியவர் ஒருவர் உயிரிழப்பு.

* சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து ரயில்வே ஊழியர் உயிரிழந்துள்ளார்.

* பெரியகுளத்தில் முதலமைச்சர் பங்கேற்கும் எம்ஜிஆர் விழா நவ. 5க்கு பதில் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

* 100 ஆண்டுகளுக்கு மேல் விவசாயம் செய்து வரும் விளைநிலங்களுக்கு பட்டா வழங்க கோரி வடகாடு பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை