full screen background image
Search
Monday 6 May 2024
  • :
  • :
Latest Update

பாலச்சந்தர், கமலஹாசனால் ஈர்க்கப்பட்டு சினிமாவுக்கு வந்தேன் – நாயகன் ரக்ஷித் ஷெட்டி

 

பாலச்சந்தர், கமலஹாசனால் ஈர்க்கப்பட்டு சினிமாவுக்கு வந்தேன் – ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ நாயகன் ரக்ஷித் ஷெட்டி

‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ முற்றிலும் ஒரு கற்பனையான கதை. அமராவதி எனும் ஒரு பழமையான வெகுதூரத்து கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும் தீர்க்கமுடியாத, ஒரு மர்மத்தை தீர்க்கும் முயற்சியே இத்திரைப்படம். இப்படத்தை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் புஷ்கர் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. இப்படம் தமிழில் வரும் 03 ஜனவரி 2020 ல் வெளியிடப்பட இருக்கிறது.

 

இது குறித்து இப்படத்தின் நாயகன் ரக்ஷித் ஷெட்டி பேசும் போது, “எனது அம்மா ஒரு சிறந்த திரைப்பட ரசிகை. அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு தென்னகத்து மொழிப் படங்களையும் பார்த்து ரசிப்பார். அதிலும் குறிப்பாக அவருக்கு பாலச்சந்தர் மற்றும் கமல்ஹாசனின் படைப்புகள் மிகவும் பிடிக்கும். அவரோடு சேர்ந்து தமிழ் படங்களின் மீது எனக்கும் ஒரு பெரிய நன்மதிப்பும் மரியாதையும் உண்டு. மேலும் தமிழ் படங்களில் கதையும், திரைகதையும் பலமாக இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அதுவே என்னை ஒரு கதைக்குழு அமைத்திட தூண்டியது. இப்படத்திற்கு கதை எழுதியிருப்பவர்கள் மிகச்சிறந்த செயல்திறம் படைத்தவர்களான ‘தி செவன் ஆட்ஸ்’ (The Seven Odds) குழுவினர். இக்குழுவில் என்னோடு சேர்ந்து சந்திரஜித் பெல்லியப்பா, அபிஜித் மகேஷ், சச்சின் (இயக்குனர்), அனிருத்தா கோட்கி, அபிலாஷ் மற்றும் நாகார்ஜுன் (பாடலாசிரியர்) ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டது. ஏழு பேரைக் கொண்ட இந்த குழு தான் எனது அனைத்து படைப்புகளுக்கும் பக்கபலமாக இருந்து, பல அருமையான கதைகளை உருவாக்கி, அவற்றை பிரமிக்கத்தக்க திரைப்படமாக உருமாற்றி, அதை வெற்றிப்படங்களாக உயர்த்தி சாதனைப் படைத்து வருகிறது.” என்றார்.

புஷ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில், சச்சின் இயக்கத்தில், ரக்ஷித் மற்றும் சான்வி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’, தமிழில் வரும் ஜனவரி மாதம் 03ம் தேதி வெளியிடப்படுகிறது.

நடிகர்கள் மற்றும் தொழிட்நுட்ப கலைஞர்கள்:
ரக்ஷித் ஷெட்டி
ஷான்வி ஸ்ரீவஸ்தவா
பாலாஜி மனோகர்
பிரமோத் ஷெட்டி
மதுசூதன் ராவ்
அச்யுத் குமார்
கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே
மற்றும் பலர்

தயாரிப்பு: புஷ்கர் பிலிம்ஸ் புஷ்கரா மல்லிக்கார்ஜுனையா
கதை: தி செவன் ஆட்ஸ் (The Seven Odds)
ஒளிப்பதிவு: கரம் சாவ்லா
இசை: அஜநீஷ் லோக்நாத் & சரண்ராஜ்
கலை: உல்லாஸ் ஹைதூர்
நடனம்: இம்ரான் சர்தாரியா
சண்டைபயிற்சி: விக்ரம் மூர்
ஆடை வடிவமைப்பு: அருந்ததி அஞ்சனப்பா
வி எப் எக்ஸ், படத்தொகுப்பு மற்றும் இயக்கம்: சச்சின்