full screen background image
Search
Tuesday 30 April 2024
  • :
  • :
Latest Update

அரிமாபட்டி சக்திவேல் – திரைவிமர்சனம்

அரிமாபட்டி சக்திவேல் – திரைவிமர்சனம் Rank 3/5

ரமேஷ் கந்தசாமி என்பவரது இயக்கத்தில் சார்லி, பவன், மேகனா எலன், இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், அழகு, சூப்பர்குட் சுப்ரமணி உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் அரிமாபட்டி சக்திவேல்.

இப்படத்திற்கு ஜே பி மேன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மணி அமுதவன் இசையமைத்திருக்கிறார்.

LIFE CYCLE CREATIONS நிறுவனத்தின் சார்பில் அஜீஸ் மற்றும் பவன் படத்தினை தயாரித்திருக்கிறார்கள்.

கதைக்குள் சென்றுவிடலாம்….

திருச்சி அருகே அரிமாபட்டி என்ற கிராமம் படத்தின் கதைக்களம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் தான் நம்ம ஹீரோ சக்திவேல்(பவன்). சக்திவேலின் அப்பாவாக வருகிறார் சார்லி, தாத்தாவாக வருகிறார் அழகு.

இவர்களது குடும்பம் அக்கிராமத்தில் ஒரு மூத்தகுடி குடும்பமாக பார்க்கப்படுகிறது. அக்கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள்/இளைஞிகள் யாரேனும் வேற்று சமுதாயத்தைச் சேர்ந்த யாரேனும் காதலித்து திருமணம் செய்தால், அவர்களை அக்கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைத்துவிடுவார்கள். இது அக்கிராமத்தில் பல ஆண்டுகாலமாக இருந்து வரும் ஒரு பழக்கமாக இருக்கிறது.

அதனையும் மீறி திருமணம் செய்து அக்கிராமத்தில் வாழ்ந்தால், அவர்களை கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள் அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், நாயகன் சக்திவேல் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த நாயகியான மேகனாவை காதலிக்கிறார். இந்த ஒரு தலை காதலானது இருதலை காதலாக மாறிவிடுகிறது.

எப்படியும் வீட்டில் கூறினால் திருமணம் செய்து வைக்கமாட்டார்கள் என்று தனது நண்பர்களின் துணையோடு பதிவு திருமணம் செய்து கொள்கின்றனர்.

இவர்களது திருமணம் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஊர் தலைவர்கள் கூடி, புதிதாக திருமணம் செய்து கொண்ட இருவரையும் ஊருக்குள் விட மறுக்கிறது. இனி சார்லி குடும்பத்தோடு அவர்கள் சேரக்கூடாது எனவும், ஊர் முன்னால் சார்லி விழுந்து மன்னிப்பு கேட்க வெண்டும் என்றும் கூறிவிடுகிறார்கள்.

இறுதியில் அக்கிராமத்தை நாயகன் பவன் சரி செய்தாரா.? பவனின் குடும்பம் என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் பவன், சக்திவேலாக ஜொலித்திருக்கிறார். ஒரு சில இடங்களில் ஏற்றக் இறக்கமுமாக நடித்திருந்தாலும், பெரிதாக எந்த இடத்திலும் சறுக்காமல் சென்றிருக்கிறார். காதல் காட்சிகளில் நன்றாகவே அவர் ஜொலித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் இன்னும் சற்று மெனக்கெடல் செய்திருக்கலாம்

நாயகி மேகனா அழகாக தோன்றி காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். பல இடங்களில் அதிகமாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.

மூத்த நடிகர்களான சார்லி, அழகு, சூப்பர் குட் சுப்ரமணி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவாகவே செய்து முடித்திருக்கிறார்கள்.

ஒரு சில இடத்தில் சார்லியின் ஓவர் ஆக்டிங்கை சற்று குறைத்திருக்கலாம். க்ளைமாக்ஸ் காட்சியில் இன்னும் அதிகமாகவே மெனக்கெட்டிருக்கலாம்.

இன்னமும் தமிழ்நாட்டில், மாற்று சாதியினரை திருமணம் செய்து கொண்டால் ஊருக்குள் விட மாட்டோம் என்ற மடப்போக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. அவர்களுக்கு உரைக்கும் விதமாக கதைகளத்தை இன்னும் அழுத்தமாகவே கூறியிருந்திருக்கலாம்.

இசை மற்றும் ஒளிப்பதிவு ஓகே ரகமாக கடந்து சென்றிருக்கிறது.

மற்றபடி,

அரிமாபட்டி சக்திவேல்  அழுத்தமாகவே கூறியிருந்திருக்கலாம்..