full screen background image
Search
Sunday 28 April 2024
  • :
  • :
Latest Update

ஹைப்பர்லிங்க் பாணி திரைக்கதையுடன் வஞ்சகர் உலகம் : அனிஷா

எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ் பீதா இயக்குநராக அறிமுகமாகும் படம் `வஞ்சகர் உலகம்’. காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் புதுமுகம் சிபி நாயகனாகவும், அனிஷா ஆம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.

நடிகர் குரு சோமசுந்தரம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கேங்ஸ்டராக நடித்திருக்கிறார். சிபி புவன சந்திரன், ஹரேஷ் பெரடி, விஷாகன் வணங்கமுடி, ஜான் விஜய் மற்றும் வாசு விக்ரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கேங்ஸ்டர் அம்சங்களுடன் காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கும் அனிஷா ஆம்ப்ரோஸ் வஞ்சகர் உலகம் குறித்து பேசும் போது,

“செய்தி சேகரிக்கும் போது ஒரு கொடூரமான சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் சம்யுக்தா என்ற பத்திரிகையாளரின் பாத்திரத்தில் நடிக்கிறேன். அதிலிருந்து அவள் மீண்டு வந்தாளா என்பது தான் என் கதாபாத்திரம் என சொல்லும் அனிஷா, வஞ்சகர் உலகம் திரைக்கதை ஹைப்பர்லிங்க் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரே நேரத்தில் நடக்கும் பல்வேறு கதைகள், அதன் கதாபாத்திரங்களை கொண்ட படமாக உருவாகியிருக்கிறது.

இந்திய பார்வையாளர்களுக்கு ‘கேங்ஸ்டர்’ கதைகளும் சலித்து போயிருக்கின்றனவா? என்று கேட்டதற்கு வஞ்சகர் உலகம் ஒரு வழக்கமான கேங்ஸ்டர் படம் இல்லை என நான் உறுதியளிக்கிறேன். பல காதல் கதைகள் ஒவ்வொன்றும் அதன் முன்னுரை மற்றும் அணுகுமுறையில் வேறுபடுவது போலவே இதுவும் ஒன்று”.

ரோட்ரிகோ டெல் ரியோ, ஹெர்ரெரா மற்றும் சரவணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். லாபிரிந்த் பிலிம்ஸ் சார்பில் மஞ்சுளா பீதா தயாரிக்கிறார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.