full screen background image
Search
Sunday 28 April 2024
  • :
  • :
Latest Update

அடுத்த ஹிட்’டுக்கு தயாராகும் சந்தானம்..!!

 

லொள்ளு-சபா புகழ் இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் தில்லுக்கு துட்டு. கருணாஸ், ஆனந்தராஜ், மொட்ட ராஜேந்திரன் என நட்சத்திர பட்டாளங்களுடன் களத்தில் இறங்கிய சந்தானம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்.

வரிசையாக தோல்வியை கொடுத்து வந்த சந்தானம், தில்லுக்கு துட்டு நல்ல ஒரு இடத்தை தக்க வைத்தது. இதன் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை உடனே தயாரிக்க களத்தில் இறங்கிய சந்தானம், அந்த பணியையும் உடனே முடித்தார். தற்போது, படத்தின் டீசர் வெளியாகும் தேதியை சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. ரசிகர்களுக்கு மீண்டும் சந்தானத்தில் கவுண்டர் காமெடி விருந்து வர இருக்கிறது.