மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தை வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனம்

இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தில் ஜீவா, இவானா, பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை மலேசியா புகழ் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டத்தோ அப்துல் மாலிக் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் , இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட இருப்பதாக மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்பொரேஷன் இந்தியா CEO திரு ராசிக் அஹ்மது சமூக வலைதளம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
