full screen background image
Search
Tuesday 14 May 2024
  • :
  • :
Latest Update

ஆர்வத்தைக் கூட்டிய துல்கரின் அறிவிப்பு


துல்கர் சல்மான் நடிப்பில் பிஜோய் நம்பியார் இயக்கும் மலையாள படம் `சோலோ’.

இப்படத்தில் 11 இசையமைப்பாளர்கள், 15 பாடல்கள் மற்றும் மூன்று ஒளிப்பதிவாளர்கள் என்ற அறிவிப்பு எல்லோரின் கவனத்தையும் சட்டென்று ஈர்த்தது. தற்போது இப்படத்தின் கதாநாயகிகள் பற்றிய அறிவிப்பு வெளிவந்து ரசிகர்களிடையே உள்ள ஆர்வத்தை மேலும் கூட்டியுள்ளது.

4 விதமான கதைகளில், நான்கு கதாபாத்திரங்களில் தோன்றவுள்ள துல்கருக்கு ‘சோலோ’ படத்தில் நேஹா சர்மா, சாய் தன்ஷிகா, சுருதி ஹரிஹரன் மற்றும் ஆர்த்தி வெங்கடேஷ் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர் என்ற செய்தியை துல்கரே அவரது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

கதாநாயகிகளுடனான காதல் காட்சிகளில் ஜொலிப்பதில் பெயர் போன துல்கர் சல்மானுக்கு இப்படத்தில் நான்கு கதாநாயகிகள் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது. தி ரெஃபெக்ஸ் குரூப் சார்பில் ரெஃபெக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் இப்படத்தை ‘கெட் அவே ஃபிலிம்ஸ்’ உடன் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மிக வேகமாக நடந்துக்கொண்டிருக்கின்றன.