விஜய்யுடன் விக்ரம் போட்டி போடமுடியாது – விஜய்சந்தர்

News

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் – தமன்னா நடிப்பில் உருவாகி வரும் `ஸ்கெட்ச்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக முன்னதாகப் பார்த்திருந்தோம். இதையடுத்து படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்’ படம் தீபாவளியை ஒட்டி ரிலீசாக இருக்கிறது.

இந்நிலையில், தீபாவளி ரேசில் விக்ரமின் `ஸ்கெட்ச்’ படம் ரிலீசாக இருப்பதாகவும், விஜய், விக்ரம் படங்கள் 11 வருடங்களுக்கு பிறகு மோத இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில், இந்த தகவல் குறித்துப் பேசிய `ஸ்கெட்ச்’ படத்தின் இயக்குநர் விஜய் சந்தர், படம் தீபாவளிக்கு ரிலீசாக வாய்ப்பில்லை என்றும், படத்தை நவம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

வடசென்னையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில், ஆர்.கே.சுரேஷ், ஸ்ரீமன், ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தை முடித்த விக்ரம் தற்போது கவுதம் மேனனின் `துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். அடுத்ததாக ஹரியின் `சாமி’ படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடிக்க இருக்கிறார்.