full screen background image
Search
Thursday 9 May 2024
  • :
  • :
Latest Update

கமல் டுவிட்டர் பதிவு குறித்து விஷால்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘துப்பறிவாளன்’. படத்தில் விஷால், பிரசன்னா, வினய், பாக்யராஜ், ரகுல் ப்ரீத் சிங், ஆண்ட்ரியா என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கான டீசர் வெளியீடு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஷால் நிகழ்ச்சியின் இறுதியில் நிருபர்களைச் சந்தித்தார்.

அப்போது, கமல்ஹாசனின் டுவிட்டர் பதிவு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.

அது குறித்து நிருபர்களுக்கு பதிலளித்த விஷால், “கமல்ஹாசனின் டுவிட்டர் பதிவு அவருடைய தனிப்பட்ட கருத்து. அதற்கு பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் ஆற்றலும், தைரியமும் அவருக்கு உண்டு. நடிகர் சங்கம் அவருக்கு எல்லா விதத்திலும் பக்கபலமாக இருக்கும்.” என்றார்.