ஜான் டோ திரைவிமர்சனம்
நடிகர்கள் : அர்ஜுன் தாஸ்,நீரவ், சஞ்சனா நடராஜன், சாரா,ஜெய் பிரகாஷ், அனுபமா குமார்,மற்றும் பலர்,
இசை : முஜீப் மஜீத்,
ஒளிப்பதிவு : ப்ரீதா ஜெயராமன்,
இயக்கம் : மதுமிதா,
தயாரிப்பு : பிரசாந்த் தேவினேனி, ஷோபுயார்லகட்ட.

கதாநாயகன் அர்ஜுன் தாஸ் போலீஸ் அதிகாரியாக வருகிறார் கிராமத்தில் மர்மமான முறையில் குழந்தைகள் காணாமல் போகும் அதன் மர்மம் என்ன இதற்கு பின்னணியில் யார் யார் இருக்கிறார் என்று தேடும் பணியில் ஈடுபடுகிறார் அர்ஜுன் தாஸ் அவரது விசாரணையில் திடுக்கிடும் அதிர்ச்சி கலந்த உண்மைகள் வெளிப்படுகிறது. தமிழக கேரளா எல்லையை ஒட்டி ஒரு கிராமத்தில் கணவனை இழந்து வாழும் ஒரு தாயி இரண்டு மகள்கள் ஒரு மகனுடன் வாழ்ந்து வரும் ஒரு நேரத்தில் தாய்க்கும் மகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் தொடங்குகிறது. திடீரென மகள் காணாமல் போய்விடுகிறார் கதையின் ஆரம்பம் தொடங்குகிறது . எந்த விதமான தேடுதல் கவனம் செலுத்தாமல் அலட்சியம் செய்கிறது காவல்துறை இதைப் போன்ற கேரளாவில் அடுத்தடுத்து மர்மம் தொடர்கிறது இந்த இரண்டு வழக்கம் கேரளாவில் நடந்த வழக்கம் சம்பந்தம் இருக்குமோ என்று சந்தேகத்தில் அர்ஜுன் தாசும் கேரளா போலீஸ் இணைந்து இருவரும் ஈடுபட்டு விசாரிக்க தொடங்குகின்றன, இவர்கள் கண்டுபிடித்தார்களா இதற்கு பின்னனி யார் யார் என்று கண்டறிந்தார்களா என்பது தான் மீதி கதை .
அர்ஜுன் தாஸ் தனது தனித்துவமான குரல் வளத்துடன் போலீஸ் அதிகாரியாக அவருக்கு பலம் கூட்டுகிறது கம்பீரமான தோற்றத்துடனும் அவர் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கும் நடிப்பை தன் திறமையை நிரூபித்து காட்டியிருக்கிறார்
சஞ்சனா நடராஜன் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து தன் நடிப்பின் மூலமாக வெளிப்படுத்தி உள்ளார் சில காட்சிகள் சிறப்பாகவே செய்துள்ளார்.
ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர்.
‘டாக்டர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சாரா, இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தோன்றி தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். சிறிய கதாபாத்திரத்தில் வந்தாலும் படவா கோபியின் குரல் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
முஜீப் மஜீத்தின் இசையும் பின்னணி இசையும் படத்தின் மற்றொரு முக்கியமான பலம். குறிப்பாக, மர்மம் நிறைந்த காட்சிகளிலும், விசாரணை தீவிரமடையும் தருணங்களிலும் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. கதையின் பதற்றத்தையும் பரபரப்பையும் பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் இசை முக்கியப் பங்காற்றியிருக்கிறது.
ப்ரீத்தா ஜெயராமனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக, நீருக்கு அடியிலும், குளம் மற்றும் ஏரிப் பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. நீருக்கடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒளிப்பதிவு முயற்சிகளும், அவற்றைத் திரையில் காட்சிப்படுத்தியுள்ள விதமும் தமிழ் சினிமாவில் வித்தியாசமான அனுபவத்தைத் தருகின்றன.
இயக்குநர் மதுமிதா, ஒரு சாதாரணமான கிரைம் திரில்லர் கதையாக இல்லாமல், பல அடுக்குகளைக் கொண்ட மர்ம விசாரணைக் கதையாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக, கதையின் வேகத்தைக் குறைக்காமல் ஒவ்வொரு காட்சியிலும் அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
மொத்தத்தில் ஜான் டோ மர்மத்தின் ஒரு தேடுதல் பயணம்.
