ஏன் என்னை ஏதோ செய்தாய் திரை விமர்சனம்
நடிகர்கள் : அந்தோணி, மதுமிதா,ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி,
இசை :ஜெய்கர் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன்
ஒளிப்பதிவு :பியட்ரோ வில்லானி
இயக்கம் : அந்தோணி.

கதாநாயகன் ஆண்டனி தனது சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து அன்புக்கு ஏங்கி சூழலில் வளர்ந்து வருகிறார் அவருடைய நண்பர்களுடைய சுற்றித்திரிந்து தன் சோகத்தை மறந்து வாழ்ந்து வருகிறார், பிறகு அவர் ஒரு தனியா நிறுவனத்தில் நல்ல ஒரு வேலையில் நல்ல ஒரு நிலைமையில் இருக்கிறார் ஆனால் அவருக்கு ஒரு குடிப்பழக்கமும் அதிகளவிலும் தினமும் கால் கேர்ள் ஒரு பழக்கமுடையவராகவே இருக்கிறார் அப்படி ஒரு நாள் கதாநாயகிய சந்திக்கிறார் பிறகு அவரிடம் லிவிங் டு கெதர் என்ற வாழ்க்கை முறையில் இருவரும் வாழ்ந்து வருகிறார்கள்,அவரது மனதின் ஆழத்தில் இருக்கும் அன்பையும், பாசத்திற்கான ஏக்கத்தையும் புரிந்துகொள்கிறார். நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.
ஆனால், ஆண்டனியின் கவனக்குறைவான விளையாட்டுத்தனமும், நண்பர்களுடன் நடந்து கொள்ளும் சில செயல்களும் அந்தக் காதலில் விரிசலை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக ஒரு சிறிய சம்பவம் இருவரின் உறவிலும் பெரிய மனக்கசப்பாக மாறுகிறது. அந்தப் பிரிவு, தவிப்பு மற்றும் மனப்போராட்டங்களுக்குப் பிறகு ஆண்டனியும் மதுமிதாவும் மீண்டும் இணைந்தார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.
இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், கதை, திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு மற்றும் தயாரிப்பு என பல பொறுப்புகளை ஏற்றிருப்பதுடன், கதாநாயகனாகவும் டி. அந்தோணி நடித்திருக்கிறார்.
ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல், தனது கதாபாத்திரத்தின் உணர்வுகளை முழுமையாக உணர்ந்து நடித்த நடிகராகவும் அவர் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக பாசத்திற்காக ஏங்கும் இளைஞனின் மனநிலையை இயல்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
சாதாரண காதல் கதைக்குள் மனித உணர்வுகள், நட்பு, தவறுகள், மனக்கசப்புகள் மற்றும் உறவுகளின் நுணுக்கங்களை இணைத்து, புதுமையான திரைக்கதை அமைப்பின் மூலம் ரசிகர்களை ஈர்க்க முயன்றிருக்கிறார் அந்தோணி. முதல் படத்திலேயே தனது தனித்துவமான திரைமொழியை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவுக்கு எதிர்காலத்தில் புதுமையான கதைகளையும், தரமான படைப்புகளையும் வழங்கக்கூடிய ஒரு புதிய படைப்பாளியின் வருகையை இந்தப் படம் உணர்த்துகிறது.
இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் வங்காளத்தைச் சேர்ந்த நடிகை மதுமிதா தாஸ், தனது முதல் படத்திலேயே கவனிக்கத்தக்க நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கதாபாத்திரத்தின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு நடித்திருக்கும் அவர், சிரிப்பு, காதல், கோபம், ஏக்கம் மற்றும் மனவேதனை என பல்வேறு உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்துகிறார். குறிப்பாக அவரது முகபாவனைகளும் எதார்த்தமான நடிப்பும் ரசிகர்களை கதையோடு ஒன்றிணைக்கின்றன.
ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி உள்ளிட்ட படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் தேவையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
புதுமுகங்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த கலைஞர்களின் கலவையில் உருவாகியுள்ள இப்படத்தில், ஒவ்வொரு கதாபாத்திரமும் கதையின் நகர்வுக்கு துணை நிற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஜெய்கர் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் இசையமைத்துள்ள பாடல்கள் கதையின் உணர்வுகளோடு பயணிக்கின்றன. பாடல் வரிகளும் இசையும் காதலின் பல்வேறு பரிமாணங்களை அழகாக எடுத்துச் செல்கின்றன.பின்னணி இசைக்காகவே இந்தப் படத்தை கவனிக்கலாம் என்று சொல்லும் அளவிற்கு இசைப் பிரிவு தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளது.
பியட்ரோ வில்லானியின் ஒளிப்பதிவு படத்திற்கு மற்றொரு முக்கியமான அடையாளமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் கதையின் உணர்வுகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
காட்சிகளின் ஒளியமைப்பு, கோணங்கள் மற்றும் இயற்கையான திரை அழகு ஆகியவை பல இடங்களில் ஓவியத்தைப் பார்ப்பது போன்ற அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.
மொத்தத்தில் ஏன் என்னை ஏதோ செய்தாய் நிச்சயமாகவே இத்தலைப்புக்கு ஏற்புடையதாக இருக்கும் இப்படம்
