லட்சுமிகாந்தன் கொலை வழக்கு  திரைவிமர்சனம்

cinema news movie review

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு   திரைவிமர்சனம்

நடிகர்கள் : வெற்றி,ரங்கராஜ் பாண்டே, மாறன்,லிசி ஆண்டனி ,பிரிகிடா சாகா,மற்றும் பலர்.

இசை :தர்புகா சிவா,

ஒளிப்பதிவு :எம்.வி. பன்னீர்செல்வம்,

இயக்கம் :தயாள் பத்மநாபன்.

கதையின் நோக்கம் ஒரு கொலை குற்றவாளி கைதிக்கு தூக்கு தண்டனை வழங்குவது சரியா தவறா என்று.கொலை வழக்கை மையமாக வைத்து, நீதி, மனிதநேயம், குற்றம், தண்டனை, மனச்சாட்சி ஆகியவற்றை பேசும் வலிமையான திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். படம் தொடங்கிய முதல் காட்சி முதல் இறுதிக்காட்சி வரை எந்த இடத்திலும் தொய்வில்லாமல் நகரும் திரைக்கதை, இந்த படத்தின் மிகப்பெரிய பலம் ஒரு சம்பவம் அறிவுவை தூக்குத் தண்டனைக் கைதியாக்குகிறது. அவனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதா இல்லையா? தூக்குத் தண்டனை நியாயமா இல்லையா என்பது மீதி கதை.

கொலைக்குற்றவாளி ஒருவனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டிய நிலையில், நீதிபதிக்கு என்னவோ உறுத்தல்! தீர்ப்பு எழுதிய நிலையில் அறிவு என்ற தூக்குத் தண்டனைக் கைதியின் சுயசரிதை புத்தகம் ஒன்றை அவர் படிக்க ஆரம்பிக்க, காட்சிகள் விரிகின்றன.

பொறுப்பில்லாத அப்பா , உழைத்துப் போராடும் அம்மா  இவர்களுக்கு மகனாக பிறந்த அறிவு, கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள்,தன் படிப்பு முடித்து விட்டு அரசு வேலைக்கு காத்திருக்கிறான் . குடும்பத்தில் வறுமை.விவசாய நிலத்தின் பத்திரம் கந்துவட்டி ரெட்டியார்  வீட்டில் இருக்கிறது. வட்டி கூட கொடுக்க முடியாத நிலையில் அவரால் ஏற்படும் அவமானங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

அவ்வப்போது அறிவுக்கு உதவி செய்யும் நபர் ஒரு திருடன் எனது அறிவுக்கு பிறகுதான் தெரிய வருகிறது வேறு வழி இன்றி அறிவும் திருட ஆரம்பிக்கிறான். கொஞ்சம் காசு வருகிறது. அதுவே நாளடைவில்  தொழிலாக மாறிவிடுகிறது.

பாலில் தண்ணீர் கலந்து விற்று ஏமாற்றும் ஒரு பெண்ணுக்கும் அவனுக்கும் காதல் . திருட்டுக்கு திருட்டுக்கு செட் ஆகி விடுகிறது. கல்யாணம் . பிள்ளைகள்.

மரத்தடியில் திடீரென்று மனைவிக்கு ஞானோதயம் வருகிறது. ”திருடிய காசில் வாங்கிய சேலையைக் கட்டிக் கொண்டு இருக்கும்போது எவன் எவனோ தொடுவது போல இருக்கிறது ” என்கிறாள். வசனம் கவனம் ஈர்க்கிறது.

வட்டிக்கட்ட திருடுவதற்கு பதில் அசலைக் கட்ட ஒரு முறை திருடி விடு என்று ஒரு ரிவர்ஸ் அடிக்கவும். செய்கிறாள் மனைவி

காலகாலமாக விவாதங்களை வளர்த்துக் கொண்டே இருக்கும் ஒரு சீரியசான விஷயத்தை எடுத்து, அது பற்றிய சிந்தனையையும் படம் பார்ப்போர் மனதில் வாதப் பிரதிவாதங்களையும் நிகழ்த்துகிறார் இயக்குனர் தயாள் பத்மநாபன்.

தனது பாணியில் இயல்பாக நடித்துள்ளார் வெற்றி பிரிகிடா சாகா கவனிக்க வைக்கிறார் . லிஸியின் பங்களிப்பு சிறப்பு.

அதிகம் பேச வாய்ப்பில்லாத தூக்குப் போடும் நபரின்  கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் சுப்ரமணிய சிவா நன்றாக பேசி இருக்கிறார் ரங்கராஜ் பாண்டே.

தூக்கு கயிறு தயார் செய்யும் விதம், ஜெயிலில் கைதியின் மனநிலை. போலீஸ் அதிகாரிக்கும் அவனுக்குமான வாதம், அம்மாவின் அழுகை என்று காட்டி … அதன் பின்னர் திருடன் கொலைகாரன் ஆகும் சூழல் ஏற்படுவது எப்படி என்று காட்டும் திரைக்கதை உத்தி நன்றாக இருக்கிறது.

இயக்குனரின் எளிமையான படமாக்கப்பிட்டது பாராட்டுக்குரியது.

காட்சியின் சூழலுக்கான உணர்வை மேம்படுத்தித் தருகிறது பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு. ஜெயில் அறையின் கடைசி ஷாட் அற்புதம்

பாரதிதாசனின் முத்தம் ஒண்ணு தாடா பாடலுக்கு மெட்டமைத்து சுகமாக ஒலிக்க விட்ட இடத்தில் ஜொலிக்கிறார் இசையமைப்பாளர் தர்புக சிவா .

தூக்குக் கைதியின் மனநிலைக்கு அப்பாற்பட்ட நடிப்பு, உரையாடல் என்று படம் போவது , படம் கொடுக்க வேண்டிய தாக்கத்தை குறைக்கிறது.

படத்தின் இறுதியில் சுவாரஸ்யமாக , ‘தூக்குத் தண்டனை சரியா தப்பா என்பதை பார்வையாளர்கள் முடிவு செய்யுங்கள்’ என்கிறார்கள்.

ஆனால் கால மாற்றத்தில் மனிதன் மேலும் மேலும் மிருகமாவதும் , கொடூர கொலைகளுக்கான அநியாய காரணங்களும், கால் பவுன் மூக்குத்திக்காக உயிர்களை எடுப்பதும் பெருகி வரும் நிலையில்,

தாம் செய்த குற்றங்களுக்கு ஆதாரம் இருக்கக் கூடாது என்ற ஒற்றைக் காரணத்துக்காக கூட அதீத சுயநலத்தால் பலர் கொலைகள் செய்யும் சூழலில் தூக்குத் தண்டனை கூடவே கூடாது என்று முழு மனதோடு சொல்ல முடியவில்லை.

அது நடக்காத வரை இன்னும் சில நூற்றாண்டுகள் ஆனாலும் தூக்குத் தண்டனை சரியா தவறா என்ற இந்த விவாதம் இப்படியே தொடரும் .

மொத்தத்தில் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு அனைவரும் பார்க்கப்பட வேண்டிய படம்.