கட்டாளன்’ திரை விமர்சனம் 

cinema news News

கட்டாளன்  திரை விமர்சனம்

கதை காட்டுகளில் யானைகளை வேட்டையாடி அதன் தந்தத்தை  சட்டவிரோதமாக விற்கும் கும்பலை சார்ந்தது தான் இந்த கட்டாளன் கதை  இதற்கு இடையே இரண்டு கும்பளுக்கள் இடையே நடக்கும் போட்டியும் சண்டை காட்சியை மிகவும் சிறப்பாக  அமைக்கப்பட்டுள்ளது . இதில் ஒரு கும்பலுடன் கதாநாயகனும் இணைந்து சட்ட விரோதமான செயல்களை ஈடுபடுகிறார், தனக்கு ஆபத்து நேரிடும் போது உதவாமல் போகின்றது அந்த கும்பல் தலைவன் பிறகு தலைவனுக்கு எதிராக திரும்புகிறார் பிறகு இவரை நேரடியாகவும் சட்ட விரோதமான செயல் ஈடுபட்டு களம் காண்கிறார் இறுதியில் இதில் யார் வென்றார் என்று தான் மீதி கதை .

படத்தின் மிகப்பெரிய பலம் அதன் காட்சியமைப்புகள் தான். குறிப்பாக காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்ட யானை துரத்தல் காட்சிகள் திரையரங்கில் ஒரு பிரம்மாண்ட அனுபவத்தை தருகின்றன. CGI மீது அதிகமாக நம்பிக்கை வைக்காமல், உண்மையான யானைகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பது தொழில்நுட்ப ரீதியாக பெரிய முயற்சியாக தெரிகிறது. தாய்லாந்து ஆக்ஷன் இயக்குநர் கேச்சா காம்பக்தீ அமைத்த ஆக்ஷன் காட்சிகள் படத்திற்கு ஹாலிவுட் தரத்தில் ஒரு விறுவிறுப்பை கொடுக்கின்றன.

ஆனால் கதையின் ஆழம் குறித்து பேசும்போது படம் சற்று தடுமாறுகிறது. கதாபாத்திரங்களின் உணர்ச்சிகள் அல்லது அவர்களின் பின்னணி பற்றிய வலுவான எழுத்து இல்லாததால், சில இடங்களில் படம் வெறும் ஸ்டைலிஷ் காட்சிகளின் தொகுப்பாக மாறுகிறது. மெதுவான ஹீரோ நடை, மாஸ் அறிமுக காட்சிகள், சண்டை, பின்னணி இசை  இவையே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன.

ரவி பஸ்ரூரின் பின்னணி இசை படம் முழுவதும் அதிரடியை தக்க வைத்திருக்கிறது. சில காட்சிகளில் அந்த இசையே படத்தை தூக்கிச் செல்லும் அளவுக்கு சக்திவாய்ந்ததாக இருக்கிறது. ஆனால் சில நேரங்களில் அந்த அதிரடியான இசை கதையின் உணர்ச்சிகளை மூடி விடுகிறது.

நடிப்பில் சுனிலும் ஜெகதீஷும் அதிக கவனம் ஈர்க்கிறார்கள். குறிப்பாக சுனிலின் அமைதியான கொடூரம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறது. ஆண்டனி வர்கீஸ் தனது வழக்கமான ரஃப் & டஃப் உடல்மொழியுடன் திரையில் நம்பகத்தன்மையாக இருக்கிறார். ஆனால் வசன உச்சரிப்பிலும் உணர்ச்சி வெளிப்பாட்டிலும் இன்னும் அதிக தீவிரம் தேவைப்படுவது உணரப்படுகிறது.

மொத்தத்தில் ‘கட்டாளன்’ அதிரடி விருந்து.