முத்து என்கிற காட்டன் வெப் விமர்சனம்
நடிகர்கள் :விஜய் சேதுபதி, ரிஷா ஜேகப்ஸ், பார்வதி, சிங்கம் புலி, மற்றும் பலர்.
இசை: ராஜேஷ் முருகேசன்,
ஒளிப்பதிவு : மது என் மற்றும் என். சண்முகசுந்தரம்,
இயக்கம்: மணிகண்டன்,
தயாரிப்பு: விஜய் சேதுபதி ப்ரொடக்ஷன்.

முத்து என்கின்ற காட்டான் கதையின் ஆரம்பம் கதாநாயகனாக விஜய் சேதுபதி துண்டிக்கப்பட்ட தலையுடன் தொடங்குகிறது தலை இங்க இருக்கு உடல் எங்கே என்று பல கோணத்தில் போலீசாரை தேட வைக்கிறது ஏன் தேடிய வைக்கிறார் அவர் வாழ்க்கையில் நடந்தது பின்னணி என்னென்ன சுவாரஸ்யமாகவும் சொல்லப்பட்ட வெப் சீரியஸ் தான் இது.
ஒரு வாட்ச் கடையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார் ஒருவர் வந்து விட்டு சென்ற பையை மீண்டும் எடுக்க வரும்போது அந்தப் பையை பற்றி ஏன் முதலிடம் சொல்லவில்லை என்று முதலாளி அவரை வேலையை விட்டு நீக்க,அந்த பையே கொண்டு வந்த நபரிடமும் மும்பைக்கு சென்று விடுகிறார். இப்படி, அவரது வாழ்க்கை ஆரம்பிக்கிறது ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்தில் தகுந்த ஏற்ப வேலை செய்து வருகிறார் அனைவரிடமும் அவர் நட்பெயர் கொண்டு வாழ்ந்து வருகிறார் பிறகு ஏன் அவர் தலையை துண்டிக்கப்பட்டது, அதற்கு காரணம் என்ன என்பது தான் மீதி கதை.
விஜய் சேதுபதி வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பில் கதையின் மர்மமும் மனிதநேயம் கொண்டு வெவ்வேறு கட்டத்தில் சந்திக்கும் மனிதர்களுக்கு உதவி செய்யும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்,
மற்ற நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நம் மனதில் நிற்கும் படியாகவும் வலம் வருகிறார்கள் கதைக்கு இவர்கள் கூட்டு பலம்.
இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை, கதைக்கு ஏற்ப அமைத்துள்ளார்.
ஒளிப்பதிவாளர்கள் மது என் மற்றும் என். சண்முகசுந்தரம் கிராமப்புறங்களின் இயற்கை அழகை கண்கவர் வகையில் பதிவு செய்துள்ளனர்.
இயக்குனர் மணிகண்டன் வழக்கம் போல் கதை திரைக்கதை இல்லாமல் ஒரு புதுமையான முயற்சியை மிக சிறப்பாகவும் செய்துள்ளார் அதை நாம் பார்க்கும் போது தான் உணர முடியும், அவருக்கு பாராட்டுக்கள்.
ஜியோ ஆஸ்டாரில் சீரியஸாக வெளியாகியுள்ளது, ஒவ்வொருவரும் நிச்சயமாக ரசிக்கும்படியாகவும் சுவாரசியமாகவும் ஒரு புது விதமான அனுபவத்தை தந்துள்ளார் இதில் எந்தவிதமும் ஐயமும் இல்லை .
மொத்தத்தில் முத்து என்கின்ற காட்டான் மனிதநேயம் கொண்ட பண்பானவன்.

