கெணத்த காணோம்-திரைவிமர்சனம்
நடிகர்கள் :யோகிபாபு,லவ்லின் சந்திரசேகர், ஜார்ஜ் மரியான், மொட்டை ராஜேந்திரன்,மற்றும் பலர்.
இசை: நிவாஸ் கே பிரசன்னா,
ஒளிப்பதிவு:தியாகராஜன்,
இயக்கம்: சுரேஷ் சங்கையா,

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோடாங்கிபட்டி என்ற குக்கிராமத்தில் வசித்து வரும் மக்களின் நீண்ட கால கோரிக்கை தன் கிராமத்திற்கு தண்ணீர் கிடைத்ததாக வேண்டும் என்று இதற்காக அவர்கள் கலெக்டர் கிட்ட பல முறை மனு கொடுத்தும் பயணிக்கவில்லை, நீரோட்டம் பரிசோதிக்கும் நபரைக் கொண்டு வந்து தன் கிராமத்தை தண்ணீர் தேடுகிறார்கள் அப்போது கதாநாயகனாகிய யோகி பாபு வசிக்கும் இடத்தில் நீரோட்டம் உள்ளது என கண்டுபிடிக்கிறார்கள். அந்த இடத்தில் கிணறு தோண்டும் திட்டமும் தீட்டுகிறார்கள் எதிர்பாராத நேரத்தில் அதற்குள் டைனோசர் எலும்புகள் கிடைக்கின்றன இதனை அறிந்த மத்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறை கிராமத்தை ஆக்கிரமிக்கிறது. மேலும் தோண்ட அவர்களை அனுமதிக்காமல் தடை விதிக்கிறது திடீரென்று அருகில் உள்ள தனது வீடும் கோயிலும் இடிந்து விழுந்து அதில் வாழ்ந்து வந்த தியாகி தாத்தா விபத்தில் சிக்கி மரணம் அடைகிறார், தாத்தாவை முன் வாசலாக தான் எடுத்து செல்வேன் என்று யோகி பாபு அடம்பிடிக்க இதில் என்ன சிக்கல் என்றால் அந்த முன் வாசல் வழியாக தான் கிணறு தோண்டப்பட்டுள்ள பள்ளம் இருக்கிறது அதை மூடிட்டு அது மேலே தான் செல்வேன் என்று அரசாங்கமிடம் அடம் பிடிக்கிறார் அவர் கேட்டது போல் அவர்கள் தாத்தா முன் வாசல் வழியாக கொண்டு போனாரா? இல்லையா? அவரை வேண்டிய தண்ணீர் கிடைத்ததா என்பது தான் மீதி கதை.
யோகி பாபு தன் கிராமத்தில் உள்ள கோயில் பூசாரியாகவும் சிற்பியாகவும் வாழ்ந்து வருகிறார் தன் கிராமத்து மக்களுக்காக பொறுப்பாகவும் ரொம்ப பொறுமையாகவும் நடிப்பின் மூலம் வாழ்ந்து காட்டி இருக்கிறார்,
லவ்லின் சந்திரசேகர் யோகி பாபுவின் காதலியாகவும் கிராமத்து பெண்ணாகவும் நடிப்பின் மூலம் தன் திறமையை வெளிப்படுத்தி காட்டிருக்கிறார்.
ஜார்ஜ் மரியான் மற்றும் மொட்டை ராஜேந்திரன் இவர்களுடன் ஊர் மக்களாக வரும் சில நடிகர்களும் கதைக்கு ஏற்ற நிஜ கிராமத்து மக்கள் போலவே நடிப்பில் உச்சம்,
இசை நிவாஸ் கே பிரசன்னா கதையின் பின்னணி இசையில் பலம் பாடல்களில் சற்று குறைவு தான் .
ஒளிப்பதிவு தியாகராஜன் கிராமத்தை காட்சியைப் படுத்தி காட்டி இருக்கும் நம் கண்முன்னே நிறுத்துகிறது.
மறைந்த இயக்குனர் சுரேஷ் சங்கையா தனது கிராமத்தில் அவர்கள் பேசும் பாவனை ஏற்ப நையாண்டியும் குசும்பும் சேர்ந்து தண்ணீர் பஞ்சம் என்ற ஒரு பிரச்சனையை தனது படைப்பின் மூலம் திரையில் வெளிப்படுத்தி உள்ளார்.
மொத்தத்தில கெணத்த காணோம் ஒரு கிராம மக்களின் வலி.

