மை லார்ட்’ – திரைவிமர்சனம்

cinema news movie review

மை லார்ட்’ – திரைவிமர்சனம்

நடிகர்கள்: சசிகுமார்,சைத்ரா, ஆஷா சரத்,குரு சோமசுந்தரம், மற்றும் பலர்,

இசை :சான் ரோல்டன்,

ஒளிப்பதிவு :நீரவ் ஷா,

இயக்கம் :ராஜு முருகன்.

கதாநாயகன் சசிகுமார் ஒரு கிராமத்தில் ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்  கதாநாயகியும் சேர்ந்து பணிபுரிகிறார் நாயகி வள்ளலார் காப்பகத்தில் வளர்ந்து வருகிறார்,ஒரு கட்டத்தில் இருவரும் மனம் முடிக்கிறார்கள் அவ்வப்போது நாயகைக்கு கடும் வயிற்று வலி ஏற்படும் மருத்துவமனை சென்ற பின் தனியார் மருத்துவமனையில் தான் இதற்கு சிகிச்சை பெற முடியும் என்று சொல்ல சிகிச்சை தேவையான பணத்தை வட்டிக்கார இடம் பெறுகிறார் சசிகுமார் அவர்களுக்கே தெரியாமல் தனது மனைவியின் சிறுநீரக உறுப்பு திருட்டு போய்விட்டது என்பது தெரியாமல் இருப்பார்கள் ஒருபுறம் இப்படி இருக்க மறுபுறம் மத்திய மந்திரி ஆகிய அவர்களுக்கும் ஒரு சிறுநீரக உறுப்பு தேவைப்படுகிறது அது சசிகுமார் இடம் தேர்ந்தெடுத்து பெற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது அதை தருகிறேன் என்று சசிகுமார் ஒப்புக்கொண்டு அங்கு செல்கிறார் அவர் அந்த மத்திய மந்திரிக்கு தனது உறுப்பை தானம் செய்தாரா? இல்லையா?மற்றும் தனது மனைவியின் உறுப்பு காணாமல் போனதே அதற்கு நியாயம் வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகுகிறார் அதில் தீர்ப்பு என்ன கிடைத்தது? என்பது தான் மீதி கதை.

சசிகுமாருக்கு, இந்த திரைப்படத்தில் அவரது இயல்பான மற்றும் எதார்த்தமான நடிப்பு வழக்கம்போல் ரசிகர்களை கவர்கிறது. நாயகி சைத்ரா, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் பெண்ணின் உணர்வுகளை மிக இயல்பாக வெளிப்படுத்தி, தனது திறமையான நடிப்பால் படத்திற்கு முக்கிய பலமாகத் திகழ்கிறார். அவரின் ஒவ்வொரு காட்சியும் ஒரு திறமையான நடிகையாக அவரை நிலைநிறுத்துகிறது.

மத்திய மந்திரி கதாபாத்திரத்தில் நடிகை ஆஷா சரத் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குரு சோமசுந்தரம் தனது அனுபவமிக்க நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தின் முக்கிய பலமாக ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மற்றும் இசையமைப்பாளர் சான் ரோல்டன் ஆகியோரின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. காட்சியமைப்பும் பின்னணி இசையும் திரைப்படத்திற்கு பெரும் ஆதரவாக உள்ளன.

மொத்தத்தில் மை லார்ட்  மனிதநேயம் கொண்ட ஒரு படம்.