தினேஷ், கலையரசன் நடித்த “தண்டகாரண்யம்” படத்திற்கு U/A

cinema news News

தினேஷ், கலையரசன் நடித்த “தண்டகாரண்யம்” படத்திற்கு U/A

இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தண்டகாரண்யம்.
இந்த படத்தை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் , லேர்ன் அண்ட் டெக் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு நிறைவுபெற்று வெளியீட்டுக்கு தயாராகும் நிலையில் இந்த படத்திற்கு U/A சான்றிதழ் சென்சார் வழங்கியுள்ளது.

இதன் அறிவிப்பை வெளியிட்ட குழுவினர் “அமரன்கள் செய்த அநீதிகளை பேசும் தண்டகாரண்யம்” என்கிற தலைப்பில் இன்று வெளியிட்டுள்ளனர்.

இந்தபடத்தின் படப்பிடிப்பு முழுக்க காடுகளும், மலைப்பிரதேசங்களிலும், மலைக்கிராமங்களிலும், நடைபெற்று முடிந்திருக்கிறது.

விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் .