full screen background image
Search
Thursday 2 May 2024
  • :
  • :
Latest Update

அமெரிக்காவின் அதீத எதிர்பார்ப்பில் விஜய்யின் ‘சர்கார்’!

விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘சர்கார்’. கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, வரலக்‌ஷ்மி சரத்குமார், ராதாரவி மற்றும் பழ கருப்பையா நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

சில தினங்களுக்கு முன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு அனைத்து தரப்பு ரசிகர்களின் பேராதரவை பெற்றது. படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது.

இந்நிலையில் படத்தின் சில பகுதிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட்டது. இதனால் அமெரிக்க வாழ் தமிழர்களிடையே இப்படம் பெரிதும் எதிர்பார்க்கக் கூடிய படமாகவும் கருதப்படுகிறது.

அமெரிக்க திரையரங்க உரிமையை பெற்றுள்ள நர்மதா மீடியாவும் கோலிவுட் மூவீஸ் அமெரிக்காவும் இணைந்து இப்படத்தை ரிலீஸ் செய்கின்றன. அமெரிக்காவில் சுமார் 200 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.