full screen background image
Search
Wednesday 15 May 2024
  • :
  • :
Latest Update

விஜய்யோடு மோதும் விஜய் ஆண்டனி!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வருகிறது “சர்கார்”. சில தினங்களுக்கு முன் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. படத்தினை சன் பிக்சர்ஸ் சார்பாக கலாநிதி மாறன் தயாரித்திருக்கிறார். இப்படத்தினை வரும் தீபாவளிக்கு வெளியிட படக்குழு ஏற்கனவே முடிவு செய்திருந்தது.

இந்நிலையில், இயக்குனர் கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்க தற்போது உருவாகி வருகிறது “திமிரு பிடிச்சவன்”. விஜய் ஆண்டனி தனது சொந்த நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக தயாரித்திருக்கிறார். இப்படத்தினை, தீபாவளிக்கு வெளியிட விஜய் ஆண்டனி முடிவு செய்துள்ளார்.

இதனால், தீபாவளி தினத்தில் விஜய்யும் விஜய் ஆண்டனியும் மோதுவது உறுதியாகியுள்ளது.