பிரம்மாண்ட மேடையில் நடனமாட இருக்கும் தமன்னா!!

News

11-வது ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கிறது. இரண்டு வருட தடை நீங்கி களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.

இந்நிலையில் முதல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன் அணிக்கும் இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் “ஐபிஎல் 2018 அறிமுக விழா”வில் பாலிவுட் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு நடனமாட இருக்கிறார்கள்.

பாலிவுட்டின் நடனப் புயல் ஹிருத்திக் ரோஷன், ரிஷி தவான் ஆகியோரும், நடிகைகள் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், ப்ரினீதி சோப்ரா ஆகியோரும் கலந்துகொண்டு நடனம் ஆடுகிறார்கள். ரன்வீர் சிங் தோள்பட்டை காயம் காரணமாக இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களோடு தற்போது தமன்னாவும் இணைந்து நடனாமாட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்த கௌரவமாகக் கருதுவதாக தமன்னா தெரிவித்துள்ளார்.

பாகுபலி படத்தின் மூலம் தமனனா பாலிவுட்டில் பிரபலமடைந்தது குறிப்பிடத் தக்கது.