டாப் கியரில் பறக்கும் வரலட்சுமி!!

News

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போதைக்கு அதிக படங்களைக் கையில் வைத்திருக்கும் நடிகை என்றால், அது வரலட்சுமி தான். ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘ சண்டக்கோழி-2’ விஜய்யின் 62-வது படம் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இவை மட்டுமல்லாமல், இப்போது “வெல்வெட் நகரம்” என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்குகிறார். கதாநாயகியை மையப்படுத்திய சைக்லாஜிக்கல் ஆக்‌ஷன் திரில்லர் படமாக இதை உருவாக்க இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இதில் வரலட்சுமி சரத்குமார் ஜெர்னலிஸ்டாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமாருடன் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.