full screen background image
Search
Tuesday 30 April 2024
  • :
  • :
Latest Update

ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டிய படம்!

கடந்த வெள்ளிக் கிழமை வெளியான  படம் “விதி மதி உல்டா”. “நாளை நடக்க இருப்பது முன்னாடியே தெரிந்தால் வாழ்க்கை நல்லா இருக்கும் என்று நினைப்பவர்கள், நிஜத்தில் அப்படி மாறிவிட்டால்
வாழ்க்கை எப்படி இருக்கும்” என்பதை காமெடி கலந்து பொழுதுபோக்கு படமாக விஜய் பாலாஜி இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், மகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்.

“நல்ல பொழுதுபோக்கு படமாக “விதி மதி உல்டா” இருக்கிறது. இந்தப் படத்தின் இயக்குநருக்கும், குழுவினருக்கும் என் வாழ்த்துகள்” என்று பாராட்டி இருக்கிறார்.

ரமீஸ் ராஜா கதாநாயகனாகவும், ஜனனி நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். மேலும், டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
அஸ்வின் வினாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார்.