full screen background image
Search
Saturday 21 September 2024
  • :
  • :
Latest Update

விஜய் சேதுபதியின் டபுள் ட்ரீட்!

தமிழ் சினிமாவின் ஆச்சர்யம் விஜய் சேதுபதி. வருடத்திற்கு 4 படங்கள், 5 படங்கள் என எப்படித்தான் நடித்துத் தள்கிறாரோ? என்று மற்றவர்கள் மளவிற்கு அடுத்தடுத்து படங்கள் நடிக்கக் கூடியவர்.
அவரது எளிமையான சுபாவத்திற்காகவே அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது.

சென்ற ஆண்டு மொத்தம் 4 படங்கள் வெளியானது விஜய் சேதுபதி நடிப்பில். அதைப்போல இந்தாண்டும் அவரது படங்கள் வரிசையில் நிற்கின்றன. அந்த வகையில் ஆண்டின்
தொடக்கத்திலேயே அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியொன்றை விஜய் சேதுபதி தரவிருக்கிறார்.

அது என்னவெனில்,

வருகிற ஜனவரி 6ஆம் தேதி மலேசியாவில் நடைபெற இருக்கிற நட்சத்திர கலைவிழாவில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்ரோம்” படத்தின் பாடல்களும்,
“ஜுங்கா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்படுகின்றது.

இவை மட்டுமில்லாமல் இமைக்கா நொடிகள், 96, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, சூது கவ்வும்2, மணிரத்னம் இயக்கத்தில் பெயரிடாதப் படம் என அடுக்கடுக்கான படங்கள் இந்த ஆண்டில் வரிசையாக
வெளியாக இருக்கின்றன.