விட்ட இடத்தை பிடிப்பாரா ஜீவா?

News

ஒரு காலத்தில் (?) டாப் கியரில் பறந்தவர் நடிகர் ஜீவா. இவரது குறும்புப் பேச்சும், துள்ளலான நடிப்பும் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது.
யார் கண் பட்டதோ சமீப காலமாக ஜீவா தொட்டதெல்லாம் அவுட்.

எப்படியாவது இழந்த இடத்தை பிடித்துவிட வேண்டும் என்று தனது பாஸிட்டிவ் பாயிண்டான காமெடி தான் கைகொடுக்கும் என்று உணர்ந்து, காமெடி படங்களின் ஜாம்பவான்
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் “கலகலப்பு2” படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருடன் “மிர்ச்சி” சிவா, ஜெய், கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஜீவாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வந்துள்ளது. அதில் அவருக்கு ஜோடியாக அர்ஜுன் ரெட்டி புகழ் நடிகை ஷாலினி பாண்டே நடிக்கவிருக்கிறார் என்ற செய்தியும் வந்துள்ளது.
காமெடி த்ரில்லராக உருவாகவிருக்கும் இந்தப் படத்தை, ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி.

மேலும், இந்தப் படத்திற்கு விக்ரம் வேதா புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்குகிறது.” என்றார்.

ஜீவா நடிப்பில் நிறைய முன்னணி தொழிற்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றவிருக்கும் இந்தப் படத்திற்கு இப்போதே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.