full screen background image
Search
Sunday 5 May 2024
  • :
  • :
Latest Update

கோதண்டம் மாமாவுக்கு விருது!

சமீபத்தில் வெளியான அண்ணாதுரை திரைப்படத்தில் “கோதண்டம்” என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றவர் செந்தில்குமரன். இவரின் நடிப்பை கௌரவிக்கும் வகையில் “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் விருது” வழங்கப்பட்டுள்ளது. இதற்காக செந்தில்குமரன் நன்றி தெரிவித்து வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு,

“விஜய் ஆண்டனி சார் எனக்கு கொடுத்த வாய்ப்பால் “அண்ணாதுரை” படத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் எனது நடிப்பைப் பாராட்டி “மகாஃபைன் ஆர்ட்ஸ்” மற்றும் “கலையின் குரல்” மாத இதழ் சார்பில் எனக்கு “புரட்சித்தலைவர் எம்ஜிஆர் விருது” வழங்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பு விருதாக எனக்கு இது கிடைத்திருப்பது பெருமைக்குறியதாக கருதுகிறேன். மேலும் இந்த விருதை நீதியரசர் எஸ்.கே.கிருஷ்ணன் மற்றும் அய்யா சாருஹாசன் ஆகியோரின் கரங்களில் இருந்து பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். தேர்வு செய்த தயாரிப்பு நிர்வாகி மற்றும் திரைப்பட பத்திரிகைத் தொடர்பாளர் அண்ணன் திரு கடையம் ராஜு அவர்களுக்கு நன்றி” என செந்தில்குமரன் கூறியிருக்கிறார்.