full screen background image
Search
Sunday 5 May 2024
  • :
  • :
Latest Update

பாலா படத்தின் முக்கிய அறிவிப்பு!

“தாரை தப்பட்டை” படத்திற்குப் பிறகு இயக்குநர் பாலா இயக்கி வரும் படம் “நாச்சியார்”. ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஜோதிகா நடித்து வரும் இந்த படத்தை பாலாவின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமாகிய “பி ஸ்டுடியோஸ்” தயாரிக்கிறது.
வழக்கம்போல படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், படம் சம்பந்தமான முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

நாச்சியார் படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதி தான் அந்த அறிவிப்பு. “பி ஸ்டுடியோஸ்” சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், “நாளை (15.11.2017) மாலை 5 மணிக்கு நடிகர் சூர்யாவின் ட்விட்டர் பக்கத்தில் நாச்சியார் படத்தின் டீசர் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்திற்கு “இசைஞானி” இளையராஜா இசையமைத்துள்ளார்.