full screen background image
Search
Sunday 5 May 2024
  • :
  • :
Latest Update

கமலின் ஜாதகம் கணித்த பண்டிட்

பிரபல சோதிடர் ராடன் பண்டிட் கமல்ஹாசனின் ஜாதகம் மிகவும் அற்புதமான ஜாதகம் என்றும், அவர் அரசியலுக்கு வந்தால் எதிர்க்கட்சி செயல் தலைவரான ஸ்டாலினை விடவும் அதிக வெற்றிகளை பெறுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கமல்ஹாசனின் ஜாதகம் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் ஜாதகத்தைப் போல இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

மேலும் கமல்ஹாசன் திரைப்படத்துறையில் பல வெற்றிகளை பெற்றாலும் தனது வாழ்க்கையை இன்னும் வாழவில்லை எனவும் ,அவர் இனிமேல் வாழப்போகும் வாழ்க்கைதான் மக்களுக்காக வாழும் வாழ்க்கை என தெரிவித்துள்ளார்.

மேலும் கமல்ஹாசன் 80 முதல் 90 வயது வரை ஆரோக்கியமாக இருப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலையெல்லாம் ராடன் பண்டிட் அவருடைய யூடுப் சேனலில் தெரிவித்துள்ளார்