பேசும்படியான பேசாத கதாபாத்திரம்!!

News

காடு மற்றும் காட்டு மனிதர்களை பின்னணியாக வைத்து, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் புதிய படம் ‘வனமகன்’. இப்படத்தில் ஜெயம் ரவி காட்டில் வசிக்கும் இளைஞராக நடித்துள்ளார். சாயிஷா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இப்படத்தில் ஜெயம் ரவிக்கு வசனங்களே இல்லாமல், முழுக்க முழுக்க சைகையிலேயே பேசி நடித்திருக்கிறாராம். அவர் இதுவரை நடித்த படங்களில் இந்த படத்தின் கதாபாத்திரம் பேசும்படியாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறினர்.

‘வனமகன்’ படத்தை வருகிற மே மாதத்தில் திரைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளனர். இப்படம் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.