full screen background image
Search
Monday 6 May 2024
  • :
  • :
Latest Update

பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் அமேசான் ஒரிஜினல் சீரிஸான ‘புத்தம் புது காலை விடியாதா’ தொடருக்கு பெரும் வரவேற்பை கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான மிகச்சிறந்த ஆந்தாலஜிக்களில் ஒன்று எனவும் பாராட்டி வருகின்றனர்.

 

பொங்கல், சக்ராந்தி, பிஹு, லோஹ்ரி ஆகிய விசேஷ நாளில் அமேசான் ப்ரைம் வீடியோ தனது ‘புத்தம் புது காலை’ ஆந்தாலஜியின் இரண்டாம் பாகமான ‘புத்தம் புது காலை விடியாதா…’ தொடரின் மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கிறது. இத்தொடரின் மூலம் இதயம் வருடும், ஆன்மாவை கிளரும் கதைகளை இந்த ஊரடங்கு காலகட்டத்தில் ஆண்டின் மிகச்சிறந்த ஆந்தாலஜி தொடராக முன்வைக்கிறது.இந்த ஆந்தாலஜி தொடரை பற்றிய தங்களது விமர்சனங்களை பகிர்ந்துள்ள பார்வையாளர்களும், விமர்சகர்களும் இதனை தங்களது மிகச்சிறந்த ஃபேவரிட் என குறிப்பிட்டுள்ளனர். நடிகர்களின் மிகச்சிறந்த நடிப்புடன் கூடிய 5 எபிசோட்களைக் கொண்ட இந்த தமிழ் ஆந்தாலஜி,  புதிய தொடக்கம் மற்றும் நம்பிக்கைக்கான செய்தியுடன் கூடிய  5 வெவ்வேறு கதைகளை சொல்கிறது.

இத்தொடரைப் பற்றிய பார்வையாளர்களின் கருத்தை இங்க காணலாம்:
 
5 எபிசோட்களும் பார்வையாளர்களின் மனதில் ஒரு நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி, விமர்சகர்களும் ஒவ்வொரு நடிகரின் நடிப்பையும் பாராட்டி வருகின்றனர். நாடியா முதல் ஜோஜு வரை, லிஜோமோல் ஜோஸ் முதல் அர்ஜுன் தாஸ், சனந்த், ஐஸ்வர்யா என ஒவ்வொருவரின் நடிப்பும் மறக்கமுடியாத ஒன்று என்று புகழ்ந்துள்ளனர். இன்னும் சிலரோ இத்தொடரை கண்களுக்கு விருந்து என்றும், மனதில் நெருக்கமான ஒன்று என்றும் கூறுகின்றனர்.‘புத்தம் புது காலை விடியாதா….’ தொடரின் ஒவ்வொரு கதையும் தனித்தனியானது எனினும் அவை அனைத்தும் நம்பிக்கை என்னும் சுயத்தை உணர்தல் மற்றும் மனித உறவுகள் வழியான புதிய தொடக்கம் என்ற ஒரே கதைக்கருவினால் இணைக்கப்பட்டுள்ளன. இவை நம்பிக்கை, காதல், இரண்டாம் வாய்ப்புகள் ஆகியவற்றைக் கொண்டு இரண்டாவது கோவிட் 19 ஊரடங்கின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதைகள். ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அர்ஜுன் தாஸ், திலிப் சுப்பராயன், கௌரி ஜி. கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் ஜோஸ், நாடியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந்த் மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் நடித்துள்ள இக்கதைகளை பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் ஆண்டனி மற்றும் சூர்ய கிருஷ்ணா ஆகியோர் இயக்கியுள்ளனர்.

Putham Pudhu Kaalai Vidiyaadha Review - Rediff.com movies

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘புத்தம் புது காலை விடியாதா….’ இதயத்தை வருடும் கதை சொல்லலுடன் பார்வையாளர்களை ஈர்ப்பதாக உறுதியளிக்கிறது. மேலும் துன்பங்களை எதிர்கொள்ளும் மன உறுதி மற்றும் நெஞ்சுரத்தைக் கொண்டாடுகிறது. இதன் மூலம் இது வருடத்தின் சிறந்த ஆந்தாலஜியாக மாறுகிறது. தற்போது இத்தொடர் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது.