அமலா பாலுக்கு இது போதாத காலம் போல, ஒரு கார் வாங்கப்போய் அவர் நிம்மதி இழந்திருக்கிறார் இப்போது. கேரளா போலீஸ் வேகமாக அமலா பாலின் இந்த வரி ஏய்ப்பு வழக்கை விசாரித்து வருகிறது.
அந்த விசாரனையில், வரி ஏய்ப்பு வழக்கில் பல திடுக்கிடும் தகவல்களை கேரளா போலீசார் திரட்டியுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படப்பிடிப்புகாகப் பாண்டிச்சேரியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அந்த முகவரியில்தான் காரைப் பதிவு செய்துள்ளதாகவும் அமலா பால் முன்னர் கூறியிருக்கிறார்.
ஆனால், இது சம்பந்தமான எந்த ஒரு ஆவணத்தையும் அவர் இதுவரை தாக்கல் செய்யவில்லையாம். அமலா பால் வசிக்கும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின் முகவரியில் இதேபோலப் பல சொகுசு கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அமலா பால் அங்கு வசித்ததாகக் கூறுவது ஏற்புடையதாக இல்லை எனவும், அமலா பால் பொய்யான தகவலைத் தெரிவிக்கிறார் எனவும் கூறப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணையில் வெளிவந்த தகவல்களை நீதிமன்றத்திற்கு இந்தக் குழு அனுப்பும். அதன்படி அமலா பால் மீதான மேல் நடவடிக்கைகள் நீதிமன்றம் எடுக்கும் என்றும் தெரிகிறது.


