2.0 படத்திற்கு சென்சார் தரப்பில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டது..!!

News

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடித்த படம் எந்திரன். இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது 2.0. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார்.இந்நிலையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், இதுவரை இயக்கிய படத்திலேயே 2.0 படம் தான் மிகக்குறைந்த ரன்னிங் டைம் கொண்ட் படம் என தெரியவந்துள்ளது.
உலகம் முழுதும் இன்னும் 9 நாட்களில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள 2.0 படத்தின் சென்சார் பணிகள் கடந்த வாரம் முடிந்து U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. தற்போது இப்படத்தின் ரன்னிங் டைம் வெளியாகியுள்ளது. 2 மணி 28 நிமிடம் 52 நொடிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை வெளியாகியுள்ள ஷங்கர் படங்களிலேயே இது தான் மிக குறைவு என கூறப்படுகிறது.