full screen background image
Search
Thursday 9 May 2024
  • :
  • :
Latest Update

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை சரியாக 10 மணியளவில் வெளியானது. மொத்த தேர்ச்சி விகிதம் 94.4 சதவீதம். கடந்த ஆண்டை விட 0.8 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

தேர்வு முடிவுகளை, www. tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தேர்வு முடிவுகளை, மாணவர்கள் பள்ளியில் பதிவுசெய்திருக்கும் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், 19 ஆம் தேதியிலிருந்து 22 ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மறு கூட்டலுக்கான கட்டணமாக, தமிழ் மற்றும் ஆங்கிலத்துக்கு தலா 305 ரூபாய் என்றும் மற்ற பாடங்களுக்கு 205 ரூபாய் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

கடந்த 12 ஆம் தேதி, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.