ரஜினி படத்தின் சேட்டிலைட் உரிமை பெற்ற விஜய் டிவி

News

கபாலி படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் – பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் காலா.

வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்திருக்கும் இப்படத்தில் நானா படேகர், சமுத்திரகனி, ஹுயூமா குரேஷி, ஈஸ்வரி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஏப்ரல் 27ம் தேதி வெளியாகவிருந்த இத்திரைப்படம் தமிழ் சினிமா ஸ்டிரைக் காரணமாக தள்ளிப்போனது.

ஸ்டிரைக் முடிவுக்கு வந்த நிலையில் காலா திரைப்படம் ஜுன் 7ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.