வெஞ்சென்ஸ் – திரைவிமர்சனம்
நடிகர்கள்:அபர்ணதி, சச்சு, லிவிங்ஸ்டன், இளவரசு, ஜான்விஜய், கேபிள் சங்கர், காளி வெங்கட்,மற்றும் பலர்.
இசை :கார்த்திக் ராஜா,
ஒளிப்பதிவு:M. S. பிரபு,
இயக்கம் :ராகுல் அசோக்,
தயாரிப்பு :A. S. அசோக் குமார்.
2042-ல் ஒரு கற்பனை உலகத்தில் படம் துவங்குகிறது. அங்கிருந்து கட் செய்து 1985-க்கு கதை செல்கிறது. 10Th படிக்கிறார் சிறுவயது நாயகி அபர்ணதி. அவருக்கு தன்னைப் பற்றி பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணம்,அதற்காக கஷ்டப்பட்டு படித்து முன்னேறுகிறார். பின்னாளில் அவர் கலெக்டரும் ஆகிவிடுகிறார். அதன்பின் அவர் சில அரசியல் ஆட்டங்களை ஆடுகிறார். அந்த அரசியல் களம் அவருக்கு எவற்றையெல்லாம் பரிசளிக்கிறது என்பது படத்தின் மீதி கதை.

அபர்ணதி ஒரு நல்ல நடிகையாக படத்தை தாங்கியுள்ளார். அவர் டாமினேட் செய்யும் காட்சிகள் எல்லாம் சிறப்பு. எமோஷ்னல் காட்சிகளிலும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். அடுத்ததாக லிவிங்ஸ்டன், இளவரசு, ஜான்விஜய், கேபிள் சங்கர் உள்ளிட்ட மற்றும் பலர் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளனர்
கார்த்திக் ராஜா இசையில் சத்தம் கொஞ்சம் அதிகம். மேலும் பாடல்களும் மிக சுமார் தான்,MS.பிரபு ஒளிப்பதிவைச் செய்துள்ளார். அவரின் அனுபவம் இன்னும் கவனம் தேவை.
ஒரு நல்ல பொலிட்டிகல் ஐடியாவைப் பிடித்த இயக்குநர் திரைக்கதையில் முழுமையாக கோட்டைவிட்டுள்ளார். கதை எங்கெங்கோ பயணிக்கிறது. படத்தின் நீளமும் பெரிய மைனஸ். இப்போதெல்லாம் 2 மணிநேரமே அதிகம் என்ற மைன்ட்செட்-க்கு ஆடியன்ஸ் வந்துவிட்டார்கள்
மொத்தத்தில் வெஞ்சென்ஸ் திசை தெரியாமல் அலைகிறது.

