வடசென்னை வாசியாகும் அஜித்!

News

அஜித் – சிவா கூட்டணியில் உருவாகும் நான்காவது திரைப்படம் “விஸ்வாசம்”. இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா “ஆரம்பம்” படத்திற்குப் பிறகு நடிக்கிறார். மேலும் முதல் முறையாக இசையமைப்பாளர் டி.இமான், அஜித் படத்திற்கு இசையமைக்கிறார். காமெடி நடிகர் யோகி பாபுவும் இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

கதை பற்றியோ, அஜித் என்ன வேடத்தில் நடிக்கிறார் என்பது குறித்தோ இதுவரை எந்த தகவலுமே வெளிவராமல் ரகசியம் காக்கிறார்கள் படக்குழுவினர்.
எனினும் “விஸ்வாசம்” படத்திற்காக வடசென்னை பகுதிகளை அச்சு அசலாக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி வேக வேகமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதன் மூலம் “விஸ்வாசம்” படத்தில் அஜித் வடசென்னை வாசியாக நடிக்கவிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. சமீபத்திய தமிழ் சினிமாக்கள் அனைத்தும் வடசென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை மையமாக வைத்தே வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில் விஸ்வாசமும் அப்படிப்பட்ட படமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

விக்ரம் வேதா, மேயாத மான், மெர்சல், வேலைக்காரன் போன்ற வெற்றி வெற்ற படங்கள் வடசென்னையை மையமாக வைத்து வெளிவந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.