தீவிர அரசியலுக்கு வரும் நேரம் வந்துவிட்டது – உதயநிதி ஸ்டாலின்!

News

நடிகர் உதயநிதி ஸ்டாலின் யாருடைய வாரிசு என்பது நாமனைவரும் அறிந்ததே.. யார் யாருக்கோ அரசியல் ஆசை இருக்கும் போது
இவ்வளவு பெரிய அரசியல் குடும்பத்தில் பிறந்து விட்டு அரசியலில் இருந்து அவர் எப்படி அரசியலுக்கு வராமல் போவார்.

அவருக்கு நடிப்பெல்லாம் பார்ட் டைப் வேலை போல தான். தன்னை தமிழகத்தின் கடைசி வரை கொண்டு சேர்த்துக் கொள்ள சினிமாவை
பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை. காலம் வருகையில் கோதாவில் இறங்குவார் என்பதே அரசியல் அறிந்தவர்களின்
கணிப்பாக இருந்து வந்தது.

இப்போது ரஜினி, கமல், விஷால் என்று சாரை சாரையாக சினிமாவிலிருந்து அரசியலுக்கு ஜம்ப் அடிக்கும் நட்சத்திரங்கள் வரிசையில்,
உதயநிதியும் இணைந்திருக்கிறார்.

தான் அரசியலுக்கு வர வேண்டிய நேரம் இதுதான் எனவும், விரைவில் தீவிர அரசியலில் களம் காணுவேன்
என கூறியிருக்கிறார்.

ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. ஆரம்பிச்சிட்டாங்க.