தக் லைஃப் – திரைவிமர்சனம்

cinema news movie review

தக் லைஃப் – திரைவிமர்சனம்

நடிகர்கள் :கமல்ஹாசன், எஸ்.டி.ஆர், திரிஷா அபிராமி மற்றும் நட்சத்திரப் பட்டாளம்

இசை: ஏ.ஆர். ரகுமான்

ஒளிப்பதிவு :ரவி கே சந்திரன்

இயக்கம்: மணிரத்தினம்

தயாரிப்பு: ராஜ்கமல் இன்டர்நேஷனல் & மெட்ராஸ் டாக்கீஸ்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து உள்ள கூட்டணி தான் மணிரத்தினமும் உலக நாயகன் கமலஹாசனம்  இளம் பட்டாளத்துடன்  தக் லைஃப் படம்.

தக் லைஃப் என்பது ஒரு கேங்ஸ்டர் கதையம்சத்துடன் கூடிய குடும்பத்தோடு பிணைந்த உணர்வுப்பூர்வமான படமாகும். கமலஹாசனுக்கும் எஸ்டிஆர் க்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதில் பின்னால் என்ன உள்ளது கடைசியில் இவர்கள் சேர்ந்தார்களா பிரிந்தார்களா என்பது தான் மீதி கதை

கமல்ஹாசன் சக்திவேல் எனும் தாதா வேடத்தில் அசத்துகிறார் எஸ் டி ஆர் அவர் கதாபாத்திரத்தில் கதை கச்சிதமாகவும் அற்புதமாக நடித்துள்ளார்.

கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் கமல்ஹாசனும் எஸ்.டி.ஆரும் ஒருவருக்கொருவர் எதிராக தீவிரமாக மோதும் காட்சிகள், விறு விறுப்பின் உச்சம்.

ஏ ஆர் ரகுமான் இசை எப்போதுமே ஒரு தனி ரகம் ஆனால் காட்சிக்கு எதுவும் ஒட்டவில்லை.

ஒளிப்பதிவு ரவி கே சந்திரன் செய்த காட்சிகள் பிரம்மாண்டம் படத்தின் பெரிய பலமும் கூட.

மொத்தத்தில் தக் லைஃப் தக்கவைப்பு.