மீண்டும் வருகிறாள் ”ஆல்தியா”!

இயக்குனர் ராம் இயக்கத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் “ தரமணி”. யுவன் ஷங்கர் ராஜா இசையில் அத்தனை பாடல்களும் ஹிட்டடிக்க, தமிழ் சினிமாவின் தரமான படம் என்று தரமணியைப் பலரும் பாராட்டினார்கள். ஆண்ட்ரியாவின் (ஆல்தியா) கேரியர் பெஸ்ட் என்று சொல்லப் படுகிற தரமணி திரைப்படத்தை மீண்டும் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்கள் இப்போது. ஆண் பெண் உறவுச் சிக்கல்களைக் குறித்தும், நகரமயமாக்கலால் தொலைந்து போன சென்னையின் உண்மையான அடையாளத்தையும் துணிச்சலுடன் பேசிய […]

Continue Reading

மாரி 2-ல் இசையமைப்பாளரை மாற்றிய தனுஷ்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மாரி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார் பாலாஜி மோகன். இப்படத்தை தனுஷ், தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் ஆகியுள்ளார். வில்லனாக டோவினோ தாமஸ் நடிக்க இருக்கிறார். இரண்டாவது லீட் ரோலாக கிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மாரி’ முதல் பாகத்தில் அனிருத் இசையமைத்திருந்தார். […]

Continue Reading

அதர்வாவின் அடுத்த பட வெளியீடு

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான அதர்வா தற்போது, `செம போத ஆகாதே’, `ருக்குமணி வண்டி வருது’, `இமைக்கா நொடிகள்’, `ஒத்தைக்கு ஒத்த’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் `செம போத ஆகாதே’ படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். இவர் அதர்வாவின் அறிமுக படமான `பானா காத்தாடி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. `செம போத ஆகாதே’ படத்தில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடிக்கின்றனர். இவர்களுடன் அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், […]

Continue Reading

சூப்பர் டீலக்ஸில் பாதிரியாராக பயணிக்கும் மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் `துப்பறிவாளன்’. அதனைத் தொடர்ந்து மிஷ்கின் தற்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் `சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் பிசியாக இருக்கிறார். அதாவது இந்த படத்தில் பாதிரியாராக முக்கிய கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடிக்கிறார். அதுமட்டுமின்றி தியாகராஜன் குமாரராஜா, நலன் குமாரசாமி, நீலன் சேகரை தவிர்த்து மிஷ்கினும் இப்படத்தின் ஒரு பகுதிக்கு இணை எழுத்தாளராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி, பகத் பாஷில், சமந்தா, […]

Continue Reading