‘ஹீரோ’ படத்தின் மூலம் இயக்குனர் அவதாரமெடுக்கும் எழுத்தாளர் ஆனந்த் அண்ணாமலை

‘காக்கா முட்டை’ படத்திற்கு வசனம் எழுதியதற்காக பல விருதுகளை குவித்தவர் ஆனந்த் அண்ணாமலை. ‘குற்றம் தண்டனை’ படத்தில் மணிகண்டனுடன் திரைக்கதை எழுதினார். இதுதவிர பல நாவல்களை எழுதியுள்ளார். தமிழ் எழுத்தாளரான இவர், மைத்திரி மூவி மேக்கர்ஸ்-ன் ஒன்பதாவது தயாரிப்பில், விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, ‘ஹீரோ’ என்ற படத்தை இயக்குகிறார். நேரடி தமிழ் படமாக உருவாகும் ‘ஹீரோ’ அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகும்.   ‘பாகுபலி’, ‘கே.ஜி.எஃப்’ பாணியில்  விளையாட்டு த்ரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் […]

Continue Reading

மீண்டும் வருகிறான் “அர்ஜுன் ரெட்டி”

மொழிமாற்றுப் படங்களை தமிழில் வெளியிடுவதில் வெற்றி கண்டு வருபவர் A.N.பாலாஜி . சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் .பி.சவுத்ரி தயாரித்த படங்களின்  தெலுங்கு வியாபாரத்தை கவனிக்க தொடங்கியவர், பின்னர் மொழிமாற்று திரையீட்டு தொழிலுக்கு மாறினார். லவ் டுடே முதல் ரகளை வரை சூப்பர் குட் பிலிம்ஸ் தெலுங்கில் தயாரித்த படங்களை வியாபாரம் செய்தவர். சூப்பர் குட் நிறுவனத்தை கோவில் என்றும் சவுத்ரியை கடவுள் என்றும் நன்றியோடு நினைப்பவர். மகேஷ் பாபுவின் ‘பிசினஸ் மேன்’ ,’நம்பர் ஒன்’,பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், நயன்தாரா படங்கள் மற்றும்  நாகார்ஜூனாவின் 10 படங்கள், சைதன்யா படங்கள் என […]

Continue Reading

“தெலுங்கு பேசிய விஜய் தேவரகொண்டாவை தமிழ் பேசவைக்க ஆசைப்பட்டேன்” – ஆனந்த் சங்கர்..!!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா இந்தப்படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சன்சனா நடராஜன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சத்யராஜ். நாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள இந்தப்படத்தை  அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.   இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் […]

Continue Reading