எதிர்காலத் தலைமுறையின் வாழ்வை முடக்கும் திட்டம் நீட் : தங்கர்பச்சான்

நீட் தேர்வு குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாஜக கட்சியின் நேர்மையற்ற அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்திற்கு இழைத்து வந்த துரோகத்திற்கும், அநீதிக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. இதுவரை தங்களுக்கு எதிராக எது நடந்தாலும் அனைத்தையும் சகித்துக் கொண்ட மக்களும், நமக்கு இதில் என்ன பலன் கிடைக்கும் என்று நடந்து கொண்ட அரசியல் கட்சிகளும் இனியாவது மாற வேண்டும். தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வை முடக்கும் […]

Continue Reading

பிரபுதேவாவுக்கு வாழ்த்து சொன்ன சங்கர் மகாதேவன்

வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன் மற்றும் கே.எஸ்.சிவராமன் தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ஒரு பக்க கதை” படத்தைத் தயாரித்து வருகிறார்கள். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் “ஓடி ஓடி உழைக்கனும்” படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து பிரபுதேவா நாயகனாக நடிக்கும் “எங் மங் சங்” படத்தையும் […]

Continue Reading

இனியாவது மாறுவார்களா? : தங்கர் பச்சான்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் குழாயில் இருந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலிசார் தடியடி நடத்தி கலைத்தனர். இச்சம்பவம் குறித்து, இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நெடுவாசலைத் தொடர்ந்து கதிராமங்கலத்தைப் போல, மேலும் பலப்பல கிராமங்களை அழிக்கத் திட்டம் போட்டு முடித்து விட்டார்கள். இனி இதே மாதிரி ஒவ்வொரு கிராமத்திலும் நாம் சென்று போராடிக் கொண்டிருக்க […]

Continue Reading

வாய் திறக்காதவர்களின் வாய்களெல்லாம் கதறுகிறது : தங்கர் பச்சான்

இந்தியா முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டி குறித்து நடிகரும், இயக்குநருமான தங்கர் பச்சான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இதனால் நமக்கு என்ன கிடைக்கும் என நினைத்தால் இதுதான் கிடைக்கும்! விளை நிலங்களை சாகடித்தோம்! நீர் நிலைகள் அழிவதை பார்த்துக்கொண்டே இருந்தோம்! உழவர்கள் கதறினார்கள்! எதைப்பற்றியும் நாம் கண்டுகொள்ளவே இல்லை. அதன் அழிவின் தொடக்கம் தான் நம்மை நோக்கி இப்போது திரும்பியிருக்கிறது. எதற்கும் வாய் திறக்காதவர்களின் வாய்களெல்லாம் இப்போது GST, GST  என கத்துகிறது, கதறுகிறது! […]

Continue Reading

தமிழக உரிமைகள் பறிபோக சுயநல அரசியல் கட்சிகளே காரணம் : தங்கர்பச்சான் காட்டம்

இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் தமிழக அரசியல் கட்சிகளை விமர்சித்து, ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  அனைவருக்கும் வணக்கம். நீரின்றி அமையாது உலகு. இதன் பொருளைக் கேட்டால் தெரியாதாவர்கள் இருக்க மாட்டார்கள். தெரிந்திருந்தும்  நாம் எதைச் செய்தோம்? தண்ணீரை சேமிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் எனும் அடிப்படை அறிவுகூட இல்லாமல் ஆட்சி நடத்தினார்கள். பதவியில் இருந்தவர்களும், அவர்களுக்கு அதிகாரிகளாக இருந்தவர்களும் அதைப்பற்றி சிந்தனையே இல்லாமல் சொல்வதற்கெல்லாம் துணையாய் இருந்து தலையை ஆட்டினார்கள். இதையெல்லாம் பொறுப்பற்ற […]

Continue Reading