அஅஅ ரிலீசுக்கு தடையில்லை

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ உலகம் முழுவதும் நாளை முதல் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ஏஏஏ படத்தின் முதல் பாகம் ரம்ஜானை முன்னிட்டு நாளை (ஜுன் 23) ரிலீசாகிறது. இரண்டாவது பாகம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் அஸ்வின் தாத்தா, மதுர மைக்கேல் உள்ளிட்ட 4 கெட்டப்புகளில் சிம்பு நடித்திருக்கிறார். சிம்பு ஜோடியாக ஸ்ரேயா சரண், தமன்னா, சானா கான் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். […]

Continue Reading

`ஸ்கெட்ச்’ படத்தலைப்புக்கு இதுதான் காரணம்

தமன்னா தற்போது விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் முதல் முறையாக விக்ரமுடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார். இதில் விக்ரம் பைக் திருடும் வாலிபனாக நடித்துள்ளார். அவருடைய காதலியாக தமன்னா நடிக்கிறார். கவர்ச்சி இல்லாத குடும்ப பெண் வேடம். இருவரும் நடித்த காட்சிகள் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டன. அடுத்து, சென்னை பின்னி மில்லில் ஒரு பாடலுக்கு விக்ரம் நடனமாடும் காட்சி படமாக்கப்படுகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. அடுத்து விக்ரம்-தமன்னா ஜோடியின் டூயட் பாடல் வெளிநாட்டில் […]

Continue Reading

ஸ்கெட்ச் போடும் விஜய்சந்தர்

‘பாகுபலி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமன்னா தற்போது சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களில் நடித்து வந்தார். இதில், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிந்துவிட்டது. இந்நிலையில், விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’ படத்தில் மட்டும் நடித்துக் கொண்டு வந்தார். இந்நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பையும் தமன்னா முடித்துவிட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தில் இவருடன் ஐஸ்வர்யா ராஜேஷும் இன்னொரு ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஸ்கெட்ச்’ படத்தை சிம்புவை […]

Continue Reading

100 சதவீத காதலில் ஜி.வி.பிரகாஷ்!

கடந்த 2011-ஆம் ஆண்டு தெலுங்கில் நாக சைத்தன்யா-தமன்னா நடிப்பில் வெளியாகி, வசூல் வேட்டை செய்த படம் ‘100% லவ்’. இப்படத்தை தெலுங்கில் பி.சுகுமார் என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகவிருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுகிறார். இப்படத்தை எம்.எம்.சந்திரமௌலி என்பவர் இயக்குகிறார். இவர் பேக் வாட்டர்ஸ், நடாஷா உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ப்ரெட் மார்பியிடம் பணியாற்றியவர். தெலுங்கில் இயக்கிய சுகுமார் கிரியேட்டிவ் சினிமாஸ் NY சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். NJ […]

Continue Reading

தெரிந்த படம், தெரியாத தகவல்கள்

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள `பாகுபலி 2′ உலகமெங்கும் நேற்று பிரம்மாண்டமாக வெளியானது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 650 தியேட்டர்கள் என இந்தியா முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியானது. இந்நிலையில் முன்பதிவில் நாளை வரை ரூ.240 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்து அறிந்திராத […]

Continue Reading

இணையத்தில் கசிந்த 2 நிமிட காட்சிகள் – படக்குழு அதிர்ச்சி

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் `பாகுபலி 2′. உலகமெங்கும் நாளை (ஏப்ரல் 28) பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம், இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் ரிலீசாகி புதிய சாதனை படைக்க உள்ளது. இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 2500 திரையரங்குகளில் இப்படம் ரிலீசாக உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1100 திரையரங்குகளிலும், இதர நாடுகளில் 1400 திரையரங்குகளிலும் பாகுபலி 2 வெளியாக உள்ளது. […]

Continue Reading

கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்த சத்யராஜ் : வீடியோ இணைப்பு

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் காவேரி நதி நீர் பங்கீட்டு விஷயத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் தன்னுடைய தமிழ் உணர்வை தெரிவிக்கும் வகையிலும், நடந்த வன்முறை சம்பவங்களுக்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் மிக அழுத்தமாக பேசியிருந்தார். அன்றே நடிகர் சத்யராஜின் உருவபொம்மையை கர்நாடக […]

Continue Reading