சுவாரஸ்ய கதையின் சூட்டிங் ஆரம்பம்

‘நவரச நாயகன்’ கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. திரு இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் துவங்கியது. கவுதமுடன் இணைந்து நடிக்க பல இயக்குனர்கள் கார்த்திக்கை இதற்கு முன்பு அணுகியுள்ளனர். ஆனால் அதற்கான சரியான கதை அமைந்தால் மட்டுமே நான் நடிப்பேன் என கூறி வந்தார் கார்த்திக். இதற்கிடையில் ‘அனேகன்’ படம் மூலம் புதுப்பொலிவுடன் களமிறங்கினார். தற்போது சூர்யாவுடன் `தானா சேர்ந்த கூட்டம்’ […]

Continue Reading

விஜய்யுடன் மீண்டும் இணையும் பிரபுதேவா

நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் பிரபுதேவா. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் இயக்கிய `தேவி’ படத்தின் மூலம் பிரபுதேவா ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த `வனமகன்’ படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பிரபுதேவா தயாரித்திருந்தார். இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் `மெர்குரி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், எம் எஸ் அர்ஜுன் இயக்கத்தில் `யங் மங் சங்’, கல்யாண்.எஸ் இயக்கத்தில் `குலேபகாவலி’ […]

Continue Reading

ஆறு அத்தியாயத்தில் அரசை கலாய்த்த பார்த்திபன்!

தமிழ் சினிமாவில் முதல்முறையாக 6 இயக்குனர்கள் தனித்தனியாக இயக்கியுள்ள “6 அத்தியாயம்” படத்தின் இசை வெளியீடு நேற்று நடைபெற்றது. ஹாலிவுட், பாலிவுட் சினிமாவில் மட்டுமே செய்யப்பட்டு வந்த “அந்தாலஜி” பாணியிலான திரைப்படத்தை 6 வெவ்வேறு குழுக்களை வைத்து ‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் தயாரித்திருக்கிறார். பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் பட இயக்குனருமான கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இன்னொரு அத்தியாயத்தை பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா […]

Continue Reading

டோக்கியோ செல்லும் விக்ரம் வேதா

  வொய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலட்சுமி சரத்குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில், விக்ரமாதித்தன் – வேதாளம் கதையை கருவாகக் கொண்டு வெளியான இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இத்திரைப்படம் டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வொய் நாட் ஸ்டுடியோஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் […]

Continue Reading