அணிகள் இணைப்பு குறித்து இன்று முடிவு : ஓ பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்தப்படும் என்றும், அவர் வாழ்ந்த வேதா இல்லம் நினைவிடமாக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் மீண்டும் தீவிரமாகி உள்ளது. இது தொடர்பாக இரு அணி தலைவர்களும் இன்றிரவு சந்தித்து பேசத் திட்டமிட்டுள்ளனர். அப்போது அதிகாரப் பகிர்வுகள் மற்றும் சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்குவது பற்றி விவாதிக்கப்பட உள்ளது. இதில் ஒருமித்த […]

Continue Reading

ஓபிஎஸ் அறிவிப்பால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு

அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா கட்சி ஆலோசனைக் கூட்டம் சென்னையில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி விரிவாக பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், நத்தம் விசுவநாதன், செம்மலை, கே.பி.முனுசாமி, பாண்டியராஜன், ஜெயபால், சண்முகநாதன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், பி.ஆர்.சுந்தரம் எம்.பி. உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு பன்னீர்செல்வம் அணி சார்பில் அறிக்கை ஒன்று […]

Continue Reading

ஓபிஎஸ் அணியைச்சேர்ந்த சிலர் ஈபிஎஸ் அணிக்கு வர தயாராக உள்ளனர் : அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை அண்ணாசதுக்கத்தில் நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ஓ.பி.எஸ். அணியில் இருந்து எங்கள் அணிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வரத் தயாராக இருக்கிறார்கள். எங்கள் அணி எம்.எல்.ஏ.க்கள் யாரும் ஓ.பி.எஸ். அணிக்கு செல்லத் தயாராக இல்லை. ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ளவர்களை திருப்திபடுத்துவதற்காக செம்மலை இதுபோன்ற கருத்துக்களை கூறியுள்ளார். அதில் உண்மை இல்லை. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு அமைதியான முறையில் உள்ளது. சசிகலாதான் கட்சியை நடத்துகிறார் என்று கூறுவது முற்றிலும் தவறானது. அதில் […]

Continue Reading

சசிகலா குடும்பம் இருக்கும் வரை இரு அணியும் இணைய வாய்ப்பில்லை : பன்னீர் செல்வம்

முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘எங்களின் அடிப்படை கொள்கைகளில் எந்தவித மாற்றமும் இல்லை. ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடைபெறும் வரை ஓய மாட்டோம். அதிமுகவில் சசிகலாவின் குடும்பம் இருக்க கூடாது. இவர்கள் குடும்பம் இருக்கும் வரை இரு அணியும் இணைய வாய்ப்பில்லை. சசிகலா குடும்பம் அதிமுக நடைமுறையில் தவறுக்கு மேல் தவறு செய்துள்ளது. ஒரு குடும்பத்தின் கையில் அதிமுக இருப்பதை ஏற்க முடியாது. ஜெயலலிதா மரணத்தில் புதைந்துள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும். […]

Continue Reading

ஓபிஎஸ் தலைமையில் வேட்பாளர் மதுசூதனன் நாளை வேட்பு மனு தாக்கல்

ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற தொகுதி அதிமுக பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் அவர்கள் நாளை (23.03.2017) முற்பகல் 10.30 to 11- மணி அளவில் T.H.ரோடு வண்ணாரப்பேட்டை கிருஷ்ணன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மாநகராட்சி 4-வது மண்டலம் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதில் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள் தலைமை கழக நிர்வாகிகள் மாநில மாவட்ட செயலாளர்கள் பகுதி பிற அணி நிர்வாகிகள் மகளிரணியினர் தொண்டர்கள் பலர் கலந்து கொள்ள […]

Continue Reading