சமூகத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர் சூர்யா – சௌந்தரராஜா பேட்டி

      தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சௌந்தரராஜா. கதை நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில் போன்ற படங்களில் கவனிக்க வைத்திருக்கிறார். இவர் ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல், சமூக சேவையிலும் அதிக ஆர்வமுள்ளவராக இருந்து வருகிறார். மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளை மூலம் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.   […]

Continue Reading

“நீட்” என்னும் அரக்கன் – யார் காப்பார் நம் குழந்தைகளை?!

இந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டுள்ள மாநிலம் தமிழகம். காரணம் நாம் உருவாக்கி வைத்திருக்கிற மருத்துவக் கல்லூரிகளும், அந்தக் கல்லூரிகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்குக் கிடைத்து வந்த வாய்ப்புகளும் தான். ஒரு காலத்தில் நுழைவுத் தேர்வு என்றால் என்னவென்றேத் தெரியாமல், மருத்துவப் படிப்பின் பக்கம் வராமல் இருந்த கிராமப் புற எளிய மாணவர்களின் நலன் கருதி அந்த நுழைவுத் தேர்வையே ரத்து செய்தவர்கள் நாம். அதனால் தான் எந்தத் தடையும் இன்றி நன்றாக படித்து அதிக மதிப்பெண் […]

Continue Reading

நீட் தேர்விற்கான வயது உச்சவரம்பிற்குத் தடை

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு வயது உச்சவரம்பினை இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்ணயம் செய்துள்ளது. இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. கடந்த மாதம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் பொதுப் பிரிவினருக்கு 25 வயதும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த உச்சவரம்பு அறிவிக்கைக்கு தடை விதிக்கக் கோரி கேரளாவைச் சேர்ந்த 2 பேர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு நிர்ணயிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதற்கு […]

Continue Reading

தமிழக மாணவர்களுக்காகக் களமிறங்கிய பா.இரஞ்சித்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் “கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்” (Challenges In Education – Way Forward) என்ற தேசிய கருத்தரங்கம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து பல கல்வியாளர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டனர். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, முன்னாள் நீதிபதி திரு. அரி பரந்தாமன், மூத்த கல்வியாளர் முனைவர். எஸ்.எஸ்.ராஜகோபாலன், அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர், […]

Continue Reading

ஜெயலலிதா நினைவிடத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் வெளியேற்றம்

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் அமர்ந்து போராட்டம் நடத்தினர். நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். போராட்டத்தில் […]

Continue Reading

‘நீட்’ தேர்வில் மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்னதால் சர்ச்சை: விசாரணைக்கு மகளிர் ஆணையம் உத்தரவு

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவகல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) நேற்று முன்தினம் நடைபெற்றது. நீட் தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தமிழகத்தை பொறுத்தமட்டில் நீட் தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளிடம் கடும் கெடுபிடி காட்டப்பட்டது. முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்கள் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்களுடன் வந்திருந்த பெற்றோர் […]

Continue Reading