விவசாய கடன் தள்ளுபடி, மத்திய அரசு உதவி செய்யுமா? அருண் ஜெட்லி பதில்

மராட்டியத்தில் ரூ. 30 ஆயிரம் கோடி பயிர்கடன் தள்ளுபடி வழங்குவதாக அரசு உறுதி அளித்துள்ளது. இதையடுத்து இன்று நடைபெற இருந்த பேராட்டங்களை விவசாயிகள் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டன. பயிர்க்கடன் தள்ளுபடி, வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான கொள்முதல் விலை நிர்ணயம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மராட்டியம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் கொல்லப்பட்ட விவகாரம் […]

Continue Reading

இந்தியாவின் நீளமான பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியின் கிளை நதியான லோகித் நதியின் குறுக்கே 9.15 கி.மீ. நீளத்துக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிக நீளமான பாலம் ஆகும். அசாமின் தோலா- சதியா இடையே இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இது அருணாசலப்பிரதேசத்தை அசாம் மாநிலத்துடன் இணைக்கிறது. பாலத்தின் ஒருபகுதியான சதியா என்ற இடம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து 540 கி.மீ தொலைவிலும் மற்றொரு பகுதியான தோலா அருணாச்சலப்பிரதேச தலைநகரான இட்டாநகரில் இருந்து 300 கி.மீ. […]

Continue Reading

ஓபிஎஸ் அறிவிப்பால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு

அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா கட்சி ஆலோசனைக் கூட்டம் சென்னையில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி விரிவாக பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், நத்தம் விசுவநாதன், செம்மலை, கே.பி.முனுசாமி, பாண்டியராஜன், ஜெயபால், சண்முகநாதன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், பி.ஆர்.சுந்தரம் எம்.பி. உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு பன்னீர்செல்வம் அணி சார்பில் அறிக்கை ஒன்று […]

Continue Reading

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஸ்மார்ட் போன், சிமெண்டு, மருந்துகள் விலை குறையும்

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), ஜூலை 1–ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. மொத்தம் 4 வகையாக ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் இருக்கும். எந்தெந்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு எவ்வளவு வரி என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கடந்த வாரம் இறுதி செய்தது. இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஸ்மார்ட் போன் உள்ளிட்ட பொருட்களின் விலை […]

Continue Reading

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியுடன் பன்னீர்செல்வம் சந்திப்பு

  முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 45 நிமிடம் நடைபெற்றது. சந்திப்பின் போது எம்.பி.க்கள் டாக்டர் மைத்ரேயன், அசோக்குமார் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டியில், “பிரதமர் மோடியை சந்தித்து, தமிழ்நாட்டின் பிரச்சினைகள், முக்கிய தேவைகள், அதற்கு மத்திய அரசின் நிதி உதவி பற்றி பேசினோம். தமிழ்நாட்டில் தென்மேற்கு மற்றும் […]

Continue Reading

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6000 உதவித்தொகை : மத்திய அரசு

2017 ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, அதற்கு முந்தைய நாள் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை ஆற்றியபோது, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது அவர், “நாட்டில் உள்ள 650-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெண்களுக்கான மகப்பேறு உதவி திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி கர்ப்பிணி பெண்களின் ஆஸ்பத்திரி செலவு, தடுப்பூசி, ஊட்டச்சத்துணவு ஆகியவற்றுக்காக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். இந்த பணம் கர்ப்பிணி பெண்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். இந்த நிதி உதவி திட்டமானது, பிரசவ காலத்தில் […]

Continue Reading

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஜிசாட்-9, பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் உத்தரவை ஏற்று, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள், ‘தெற்கு ஆசியா செயற்கைகோள்’ (ஜி-சாட் 9) உருவாக்கி உள்ளனர். இது ஒரு தகவல்தொடர்பு செயற்கைகோளாகும். இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.57 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி-எப்09 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். […]

Continue Reading

பிரபல நடிகர் மறைவுக்கு ரஜினி, மோடி இரங்கல்

பாலிவுட்டின் பிரபல நடிகரான வினோத் கண்ணா (70) மும்பையில் இன்று காலை காலமானார். கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர், 2 நாட்களுக்கு முன்னர், மும்பையில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மும்பையில் காலமானார். இவருக்கு கவிதா கண்ணா என்ற மனைவியும், ராகுல், அக்‌ஷயே, சக்‌ஷி என்ற மகன்களும், ஷ்ரத்தா கண்ணா என்ற மகளும் இருக்கின்றனர். பஞ்சாப்புக்கான பாராளுமன்ற உறுப்பினரான வினோத் கண்ணா பாலிவுட்டில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். […]

Continue Reading