“நான் இதை ஒரு கொள்கை என சொல்ல மாட்டேன் – கயல் ஆனந்தி

“மெதுவாக மற்றும் உறுதியாக இருப்பவர்கள் வெற்றி பெறுவர்” என்ற கோட்பாடு உண்டு. ஒரு சிலர் அதை “தேர்வு செய்வது தொடர்ச்சியாக வெற்றியை கொடுக்கும்” என மறு உருவாக்கம் செய்கிறார்கள். தனித்துவமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் ஆனந்தி சினிமாவில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருக்கிறார். ஒரு நடிகரை மிகப்பெரிய அளவில் கொண்டு சேர்க்கும் திரைப்படங்கள் அவர்கள் பெயரின் முன்னால் சேர்ந்து கொள்ளும். ஆனால் ஆனந்தி அதில் ஒரு விதிவிலக்கு. ‘கயல்’ படத்தில் மிகவும் எளிமையான மற்றும் […]

Continue Reading

பரியனை வாழ்த்திய பிரம்மாண்ட இயக்குனர்..!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் நடித்து வெளிவந்த படம் தான் ‘பரியேறும் பெருமாள்’. கிராம வாழ்க்கையை, ஒரு வாழ்வியலை கண்முன்னே நிறுத்தி அனைத்து தரப்பு மக்களிடையேயும் அமோக வரவேற்பு பெற்ற இப்படத்தினை பா ரஞ்சித் தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்திருந்தார். விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், பெரும் நட்சத்திரங்களாலும், அரசியல் பிரமுகர்களாலும் வாழ்த்துக்களை பெற்று பாராட்டப்பட்டது. இந்நிலையில் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று பாராட்டப்படும் […]

Continue Reading

பரியேறும் பெருமாள் – விமர்சனம்!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை வாசிக்க நேர்ந்தது. படிக்க படிக்க அதன் சொற்கள் ஒவ்வொன்றும் மென்மயிலிறகாய் வருடிப் போனது. சிலவை கூரிய முனையால் இதயச் சுவர்களை கீறி பதம் பார்த்தது. அந்தக் கவிதை சுமந்து வந்த அன்பு, மனிதம், கோபம், வலி எல்லாமே அப்பழுக்கில்லாத நேர்மையை பிரதிபலித்தது. அந்த நேர்மையை கட்டித் தழுவலாம், முத்தமிடலாம், பிரதிபலன் பாராத அன்பினைத் தரலாம். அந்தக் கவிதையின் தலைப்பு “பரியேரும் பெருமாள்”, எழுதியவர் மாரி செல்வராஜ். வரவேற்பும், வாழ்த்துகளும் மாரி செல்வராஜுக்கு. […]

Continue Reading

EXCLUSIVE: PARIYERUM PERUMAL OFFICIAL TRAILER

Director Pa Ranjith’s first film as producer is Pariyerum Perumal, starring Kathir and Kayal Anandhi in the lead roles. Directed by debutant Mari Selvaraj, this film is all set to release on September 28. The makers have now released the trailer of the film that is impactful and very natural. The film has got a […]

Continue Reading

பரியேறும் பெருமாள் அனுபவம் குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் பேட்டி..!!

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர் , கயல் ஆனந்தி , யோகிபாபு , லிஜிஸ் நடிக்கும் படம் “பரியேறும் பெருமாள்”.சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் செப்டம்பர் 28 அன்று வெளியாகிறது . இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் “கிம்பல்” தொழில்நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார்கள். அந்த அனுபவம் குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறுகையில், “பரியேறும் பெருமாள் என்னுடைய இரண்டாவது படம். முதல் படம் “மாலை நேரத்து மயக்கம்”. நான் பிறந்து வளர்ந்தது சென்னைதான் எனக்குஅதிகமாக கிராமத்து வாழ்க்கை பற்றி பரிச்சயம் இல்லை. எனது முதல் படமும் நகரத்து கதை சார்ந்த படம்தான். ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார்தான்எனது குரு. அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விசயங்கள்தான் என்னை புதிதாக இயங்க சொல்கிறது.  எனக்கு சில எழுத்தாளர்கள் நண்பர்கள்இருக்கிறார்கள் வாசிப்பு அனுபவமும் கொஞ்சம் உண்டு. அந்த வகையில் என்னோடு அறிமுகமானவர்தான் இயக்குனர் மாரி செல்வராஜ் . “பரியேறும்பெருமாள்” கதையை கேட்டவுடன் இந்த கதைக்கு நாம் வழக்கமான ஒளிப்பதிவு செய்யாமல் கொஞ்சம் மெனக்கடவேண்டும் என்கிற எண்ணம் வந்தது. படப்பிடிப்பு முழுக்க முழுக்க திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பகுதிகள் . அந்த ஊர்களின் பசுமை, வறட்சி பகுதிகள் , தெருக்கள்,வெயில் மனிதர்கள் ,விலங்கினங்கள் அனைத்தையும் அப்படியே படம்பிடிக்க வேணும், கூடவே ஒரு அழகியலும் இருக்கவேண்டும் என்கிறஆசை. கதைக்களம் , அதன் வேகம் இதற்கு ஈடுகொடுக்க கிம்பல் எனும் தொழில் நுட்பத்தை முழுக்க முழுக்க படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். 40 கிலோ எடைகொண்ட கிம்பல் கேமரா உபகரணங்களை தோளில் சுமந்து கொண்டு முழுப்படத்தையும் எடுப்பது சிரமமாக இருந்தாலும்  படம்பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக இருந்தது.  பட்ட சிரமத்திற்கு பலன் கிடைத்திருக்கிறது.   கிராமத்து நிலமும் மக்களும் வாழ்வியலும் தினம் தினம்என்னை உற்சாகமூட்டியதும் , தயாரிப்பாளர் பா. இரஞ்சித் அண்ணனின் ஒத்துழைப்பும், இயக்குனர் மாரிசெல்வராஜ் ஒத்துழைப்பும் சவாலான வேலையை செய்துமுடிக்க பெரும் உதவியாகஇருந்தது. எந்த  இடத்திலும் அந்த நிலத்தின் கலர் மாறாமல் அதை அப்படியே கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். மனிதர்களோடு விலங்குகளும் இந்தபடத்தில் நடித்திருக்கின்றன அவற்றை படம்பிடிக்க கிம்பல் போன்ற உபகரணம் பெரிதும் உதவியது. குடும்பத்தோடு பார்க்கக்கூடிய அழகான ஒரு படமாக வந்திருக்கிறது , திருநெல்வேலியின் நிஜ வெளிச்சத்தையும் , அழகையும்  இந்த படத்தில் பெரிதும்எதிர் பார்க்கலாம்” என்றார்  உற்சாகமாக.

Continue Reading

ஆனந்தி மற்றும் ஊர்மக்கள் போட்ட ஆட்டம்

ஆட்டம், பாட்டம் என கலைகளின் கொண்டாட்டங்களால் நிறைந்தது, தமிழர் வாழ்க்கை. அதிலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் அந்த மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கலைகள் உள்ளன. அவை திரைப்படங்களில் சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று கேட்டால்… வெகு சில படங்களைத் தவிர முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.   அந்த வகையில் திருநெல்வேலி வட்டாரத்தில் புகழ் பெற்ற “சம்படி” ஆட்டத்தை கொண்டாடுகிறது, பரியேறும் பெருமாள். இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் […]

Continue Reading

மன்னர் வகையறா விமர்சனம்!

முதலில் இயக்குநர் பூபதி பாண்டியனுக்கு நன்றிகள்..  இந்த மண்ணில் சாதி வலுவானதாகவே இருக்கிறது என்பதை எந்த பூசலும் மொழுகலும் இல்லாமல் வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். அவர் சொல்லியிருப்பதை நியாயப்படுத்தவும் வேறு செய்கிறார். எப்படியெனில், எங்கிருந்தோ வரும் ஷெட்டி, ரெட்டி, மேனன் எல்லாம் சாதி போட்டிக்கொள்ளும் போது இந்த மண்ணில் நாங்கள் சாதியை பெயருக்கு பின் போட்டுக்கொள்ளக் கூடாதா? என்று கேள்வி எழுப்புகிறார். நல்ல கேள்வி பூபதி பாண்டியன் சார். பெரியார் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயமாய்ப் பெருமைப்பட்டிருப்பார். ஒருவேளை பூபதி […]

Continue Reading